கலைமாமணி திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன்
நாட்டியம், நட்டுவாங்கம், இசை, கதாகாலட்சேபம், நிகழ்ச்சித் தொகுப்பு, புத்தகப் பதிப்பு ஆகிய துறைகளிலே இயங்குபவர்.
கர்நாடக இசை மாமேதையான முசிரி சுப்பிரமணிய ஐயர் அவர்களின் வழித் தோன்றல்.
பத்மசிறீ விருது பெற்ற பேரா. சுதாராணி இரகுபதியின் சிறீ பரதாலயா நாட்டியப் பள்ளியிலே பரதநாட்டியம் பயின்றவர். பேரா. சுதாராணி இரகுபதியிடம் பரதநாட்டிய நுட்பங்களைக் கற்றவர். சிறீ பரதாலயாவின் இயக்குநராக விளங்கிய பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த இசை மாமேதை வித்துவான் மதுரை திரு. நா. கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலிலே வளர்ந்தவர்.
பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வழங்கியவர். உலகப் புகழ் பெற்ற சென்னை மார்கழி இசை-நாட்டிய விழா மேடைகளைத் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அலங்கரிப்பவர். சுவிற்சர்லாந்து, இலங்கை, யேர்மனி, பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை வழங்கியவர்; பரதநாட்டியப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியவர். பற்பல நிகழ்ச்சிகளுக்கு நட்டுவாங்கம் செய்பவர்.
பத்மவிபூஷன் விருது பெற்ற மிருதங்க மாமேதை உமையாள்புரம் திரு. கா. சிவராமன், இசைஞானி இளையராஜா, கலைமாமணி அனிதா இரத்தினம் போன்ற உயர் கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றவர்.
திருச்சிலம்பம் எனும் பரதநாட்டியப் பள்ளியைச் சென்னை, திருவல்லிக்கேணியிலே நடத்தி வருகிறார்.
2015இல் மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் Compositions in Tamil for the Bharathanatyam Repertoire (Maargam) எனும் தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கியவர். பரதநாட்டியத்திற்கான தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
தன் அத்தை திருமதி. மேனகா கிருஷ்ணமூர்த்தியிடத்திலும் கலைமாமணி திருமதி எஸ். ராஜேஸ்வரியிடத்திலும் இசை பயின்றவர். தருமபுரம் ஆதீனம், திருமந்திர மாநாடு, அரனருள், சைவ சித்தாந்தப் பெருமன்றம்ள் உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் இசை நிகழ்ச்சிகளை வழங்கியவர்.
முத்தமிழையும் இணைக்கும் பாரம்பரிய கதாகாலட்சேப கலை வடிவத்தின் அடிபற்றி, நாட்டியத்தை முதன்மையாகக் கொண்டு இசையை இணைத்து உரையாற்றும் தனித்துவப் பாணியை வகுத்து புதுமையான நடன இசை உரை நிகழ்ச்சிகளை வழங்குபவர்.
நவவித பத்தி, திருமுறையில் ஒன்பான் பத்தி முறை, ஆடற் கலை, பெரியபுராணத்தில் திருக்கேதீச்சரம், தைத் திருநாள், அகநானூற்று அமுதம் போன்ற தலைப்புகளிலே நடன இசை உரை நிகழ்ச்சிகளை வழங்கியவர்.
மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்களின் முயற்சியால், இலங்கையின் 8 மாவட்டங்களில் திரு. வி. ஜி. சந்தோசம் அவர்கள் நன்கொடையாக வழங்கிய திருவள்ளுவர் சிலை திறப்பு விழாக்களிலே அறிமுக உரையை கதாகாலட்சேப வடிவில் வழங்கி அனைவரின் பலத்த பாராட்டைப் பெற்றவர்.
அதன்
விளைவாக கண்ணப்பன் வாசுகி அறக்கட்டளை இவருக்கு முத்தமிழ் வித்தகி என்ற
பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
இந்திய அரசின் பொதிகை தொலைக்காட்சியிலும், மக்கள் தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளின் நங்கூரி. பல மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குபவர்.
2018 மார்கழி மாதம் முழுவதும் மக்கள் தொலைக்காட்சியிலே திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்களுக்கு விளக்கம் அளித்தவர்.
இசை மேதைகளான திருமதி. M. S. சுப்புலட்சுமி, திருமதி D. K. பட்டம்மாள் ஆகியோரின் நூற்றாண்டுகளைக் கொண்டாடும் வகையில் பொதிகைத் தொலைக்காட்சியிலே ஒளிப்பரப்பான குறையொன்றுமில்லை, தீட்சிதர் கிருதி பட்டம்மாள் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவர்.
தற்பொழுது மக்கள் தொலைக்காட்சியிலே வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் பலன் தரும் பதிகங்கள் எனும் திருமுறைப் பதிகங்களின் சிறப்பை இயம்பும் நிகழ்ச்சியை வழங்கி வருபவர்.
பல தமிழக ஊடகங்களிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும், இவரின் பேட்டிகள் வெளியாகி, ஒளிபரப்பாகி உள்ளன.
தமிழ் அறிஞர் மறவன்புலவு திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் நிறுவிய காந்தளகம் புத்தகப் பதிப்பகத்தின் செயல் முகாமையாளர். காந்தளக வெளியீடுகளின் பதிப்பாசிரியர். காந்தளகம் நடத்தும் தமிழ் நூல்களுக்கான இணைய தளம் www.tamilnool.comஇன் பொறுப்பாளர்.
சென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக 2003-2005இலும், அதன் அங்கமான நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினராக 2015-2017இலும் பணியாற்றி, பதிப்புத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களித்தவர்.
கும்பகோணம் சிறீ சங்கரா கலை அறிவியல் கல்லூரியின் ஆட்சிக் குழு உறுப்பினர்.
Kalaimaamani Smt. Sasirekha Balasubramanian
A fourth
generation talent from the clan of the Carnatic music doyen, Musiri Subramanya Iyer,
Sasirekha Balasubramanian is a multi-faceted personality spreading her wings in
the fields of Bharathanatyam, Kathaakaalakshepam, Media and Publishing.
She is
the disciple of the veteran Bharathanaatyam artist Padmashree recipient Prof.
Sudharani Raghupathy. She was blessed to be under the guidance of guru Padmabhushan
recipient Vidwan Madurai Sri. N. Krishnan who was the director of Prof.
Sudharani Raghupathy’s dance institution, Shree Bharathalaya.
She learnt music from her aunt Smt. Menaka Krishnamurthy and Kalaimaamani Smt. S. Rajeswari.
She has given Bharathanaatyam performances in India and abroad and has conducted many dance workshops. She wields the nattuvaangam too. She is a graded artist of Doordarshan, Government of India.
She has decorated almost all the premier - prestigious stages of sabaas of fine arts during the successive music festival seasons, each December at Chennai for the past two decades.
She has travelled to Switzerland, Sri Lanka, Germany, UK, Singapore and USA as a messenger of classical fine arts.
As a resource person, composer of jathis, nattuvaangam artist, Kathaakaalakshepam artist and performer, she had great opportunities of working with stalwarts like Padmavibhushan recipient Umayaalpuram Dr. K. Sivaraman, Isaignaani Ilayaraja and Kalaimaamani Anita Ratnam. She also teams up with accomplished artists like Kalaimaamani K. S. R. Anirudha and Kalaimaamani Priya Murle in innovative, futuristic and torch bearing artistic ventures.
She runs her own dance school Thiruchilambam, an alliance of Shree Bharathalaya, in Triplicane, Chennai, where she trains young students in Bharathanatyam.
She presented a research paper titled Compositions in Tamil for the Bharathanatyam Repertoire (Maargam) exploring the compositions of her guru Vidwan Madurai N. Krishnan at the 9th International Tamil Conference held in Malaysia in 2015.
She is the recipient of the prestigious Tamil Nadu State Award Kalaimaamani for the year 2008.
She is a versatile Kathaakaalakshepam artist. She has given many Kathaakaalakshepam performances combining mutthamizh (oration, music and dance). In fact, Story-telling oration supported by music and dance, called Nadana Isai Urai is a new genre of stage presentation with Barathanaatyam in the core, styled by Sasirekha.
Her Nadana Isai Urai presentations have enthralled audiences in many cities of Tamil Nadu and abroad, as independent performances or as part of dance dramas, since 2006 such as Nava vidha bakthi, Aarumuga Naavalar, Thirumuraiyil onbaan bakthi murai, Aadal Kalai, Periyapuraanathil Thirukkaetheecharam, Thai Thirunaal, Akanaanootru Amutham etc. She was conferred with the title of Mutthamizh Vitthaki by the Kannanppan-Vaasugi Trust for her extraordinary talent in the art of Nadana Isai Urai.
She anchors many programmes in the government TV channel Pothigai (since 2002) and the private channel Makkal TV. She has so far anchored more than 50 live programmes (Theriyumaa unkalukku and Hello unkaludan) on Pothigai channel and has interviewed eminent personalities from various walks of life.
She also presented the much acclaimed shows Kurai ondrum illai and Dikshithar Krithi Pattammaal on Pothigai TV that showcased respectively the lives and musical journeys of stalwarts Smt. M. S. Subbulakshmi and Smt. D. K. Pattammaal during their centenaries.
She was the compere on Makkal TV, for the very popular Bharathanatyam programme Aadal Arasikalin Sangamam in 2017. In Margazhi 2018, she presented the programme Paavaiyar poatrum paavai vizhaa on Makkal TV expounding Thiruppaavai and Thiruvempaavai, the great Thamizh bakthi literatures.
She is currently presenting the programme Palan Tharum Pathikankal on Makkal TV every weekend expounding the works of the four great saivaite saints Appar, Gnaanasambanthar, Sundarar and Maanickavaasakar referred to as Naalvar.
She has also anchored many stage shows including Times Thyagaraja Awards, Chennai Book Fair, book release functions, dance performances and arangetrams, literary events etc.
Leading newspapers, magazines, journals in Chennai and in Colombo have paid rich tributes to her talents in their reviews of her performances. She has been interviewed by the print media and the television media in Chennai and abroad (Jaya TV, Makkal TV and Peppers TV of Chennai, Roopavahini of Sri Lanka, ATBC of Australia, ITBC and TTN of London) on naatyam and publishing.
Her articles on dance, music, publishing and religion have been published in the journals, Amuda Surabi, Pathippu Thozhil Ulakam, Sapthagiri and the e-journal www.kutcheribuzz.com.
She presented a research paper பன்னிரு திருமுறை – அச்சுப் பதிப்பு வரலாறு at the Sydney Murugan Saiva Neri Conference, Sydney, Australia in 2014.
She is the CEO of Kaanthalakam (publishers and sellers of Tamil books) that publishes useful Tamil books and is the fore-runner of the website www.tamilnool.com.
She was the member of the executive committee twice (2003-2005 and 2015-2017) of the Book Sellers’ and Publishers’ Association of South India (BAPASI) that conducts the annual Chennai book fair, contributing to the growth of the Tamil Publishing industry.
She is also the member of the executive committee of Sri Sankara Arts and Science College, Kumbakonam.
No comments:
Post a Comment