மதமாற்ற
முயற்சிகளும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர் துணைவியார் திருமதி
சாவித்திரி அவர்களும்.
மறவன்புலவு க.
சச்சிதானந்தன்
சிவசேனை 03.08.2019
பின்வரும் செய்தி
இலங்கையில் பரவலாக ஊடகங்களில் வருவதாகத் தெரிகிறது
•மெதடிஸ்த
திருச்சபையின் துணை தலைவராக சுமந்திரன் இருக்கிறார்
•மன்னாரில் மத
மாற்றங்களுக்கு அவரே தலைமை தாங்கிறார்
•சுமந்திரன்
மனைவிக்கு சம்பளமாக மாதம் தோறும் 175000 ரூபா வழங்கப்படுகிறது
•சுமந்திரன்
மனைவியின் செலவு தொகையாக வருடம்தோறும் ஒரு கோடி ரூபா லண்டன் திருச்சபையால்
வழங்கப்படுகிறது.
இப் பாரிய
குற்றச்சாட்டுக்களை ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன்
கூறியுள்ளார்.
இவர் தற்போது
மட்டுமல்ல இதற்கு முன்னரும் இக் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
வழக்கமாக
தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு சுமந்திரன் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மானநஷ்ட
வழக்கு போடுவார்.
ஆனால் மறவன்புலவு
சச்சிதானந்தனின் இக் குற்றச்சாட்டுகள் குறித்து சுமந்திரன் மௌனம் காத்து வருவது
இவை உண்மைதானோ என நினைக்கத் தூண்டுகிறது..
இது குறித்து
சுமந்திரனோ அல்லது அவரது செம்புகளோ பதில் தருவார்களா?
இச்செய்தி
தொடர்பாக மறவன்புலவு சச்சிதானந்தனின் விளக்கம் பின்வருமாறு.
இந்தச்
செய்தியைப் பரப்புவார்கள் தகவல்களைச் சரியாகத் தெரியாதவர்களாக இருக்க வேண்டும்.
முதலாவது செய்தி
திரு சுமந்திரன் அவர்கள் மெதடிஸ்த திருச்சபையின் துணைத்தலைவராக இருக்கிறாரா?
மெதடிஸ்த
திருச்சபையின் ஆண்டு கூட்டத்தில் அவர் துணைத் தலைவராகப் பதவி ஏற்ற காட்சிகள்
இணையத்தில் கிடைக்கின்றன பாருங்கள்.
இரண்டாவது செய்தி
அவர் மன்னாரில் மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுகிறாரா?
மெதடிஸ்த சபையின்
கடந்த ஆண்டு அறிக்கையை எடுத்துப் பாருங்கள் பல செய்திகளை சொன்னவர்கள் மதமாற்ற
முயற்சிகள் என்ற தலைப்பின் கீழ் ஒரு விளக்கமான செய்தியை எழுதியிருக்கிறார்கள்
இதற்கு முந்தைய
ஆண்டுகளில் மதமாற்ற முயற்சிகளுக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ எதிர்ப்பு
இருப்பதில்லை
ஆனால் கடந்த
ஆண்டில் மத மாற்ற முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகளை நாம் சந்திக்க வேண்டி வந்தது
விரட்டுகிறார்கள் அடிக்க வருகிறார்கள் மிரட்டுகிறார்கள் வாயிலிலேயே தடுத்து
திருப்பி அனுப்புகிறார்கள் என்றெல்லாம் மெதடிஸ்த திருச்சபை தனது ஆண்டறிக்கையில்
எழுதியிருக்கிறது
அந்த அறிக்கையை
எழுதிய ஏற்றுக் கொண்ட குழுவின் துணைத்தலைவர் திரு சுமந்திரன் அவர்கள்.
மெதடிஸ்த
திருச்சபை மன்னார் செட்டியார் மகன் கிராமத்தில் இருந்த 50 சைவ குடும்பங்களில் 15 சைவ குடும்பங்களை மதம் மாற்றி
அதை நான் நேரில் பார்த்து அவர்களில் ஒரு சிலரை தாய் மதத்துக்கு திருப்பி
இருக்கிறேன். விரும்புவர்களுக்கு அந்தப் படங்களையும் அனுப்ப தயாராக இருக்கிறேன்.
செட்டியார் மகன்
கிராமத்துக்கு அடுத்த கிராமத்தில் இருந்து 50 சைவக் குடும்பங்களை கடந்த சில ஆண்டுகளில் ஒரேடியாக
மெதடிஸ்த திருச்சபை கிறித்தவர்களாக மாற்றியிருக்கிறார்கள் என்பது சைவர்களுக்கு
இடியாக இடிக்கும் செய்தி.
மன்னார்
முருங்கன் செட்டியார் மகன் சித்தூர் ஓர் எடுத்துக்காட்டு வடமாகாணத்தில் கிழக்கு
மாகாணத்தில் மலையகத்தில் மெதடிஸ்த திருச்சபை மேற்கொள்ளும் மதமாற்ற நடவடிக்கைகள்
பற்றி விளக்கமான அறிக்கையை அவர்களை வெளியிட்டிருக்கிறார்கள்
திரு சுமந்திரன்
அவர்கள் துணைத் தலைவராக மெதடிஸ்த திருச்சபையில் இருந்துகொண்டு இதைச் செய்கிறார்
திருமதி
சாவித்திரி சுமந்திரன் மாதம்தோறும் ஒன்றேமுக்கால் லட்சம் ரூபாய் சம்பளம்
பெறுகிறார் என்பது அடுத்த வினா
திரு சுமந்திரன்
நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு தன்னுடைய வருவாய் பற்றி விளக்கமான ஓர் அறிக்கை
கொடுத்திருக்கிறார் அதிலே இலண்டனின் மதமாற்ற சபையின் பெயரை எழுதி அவர்கள் திருமதி
சாவித்திரி சுமந்திரனுக்கு மாதம்தோறும் ஆயிரத்து நூறு டாலர்களை அனுப்புவதாக
குறிப்பிட்டு இருக்கிறார்
திருமதி
சாவித்திரி சுமந்திரன் அனைத்துலக மாணவர் மதமாற்ற சபைக்கு தெற்காசியாவின்
பிராந்தியச் செயலாளர் பணிக்கு இச் சம்பளம் வாங்குகிறார். இவரது சபைக்கு உலகெங்கும்
11 பிராந்திய சபைகள்
இருக்கின்றன அந்த அந்தப் பிராந்தியத்திலே அதற்குரிய பிராந்திய தலைமையகம்
இருந்தாலும் தெற்காசிய பிராந்தியத்திற்கு லண்டனில் தலைமையகம் உள்ளது.
தெற்காசியாவில்
உள்ள எட்டு நாடுகளில் ஐந்து நாடுகளுக்கு இந்த சபை சார்பில் எவரும் செல்ல முடியாது
தடை உண்டு.
இந்தியாவில்
இந்தச் சபை சார்பில் 30,000 மாணவர்
தொண்டர்கள் பணிபுரிகிறார்கள் இதை பெருமையாக தனது அறிக்கையில் இந்த சபை
எழுதியுள்ளது. இந்த முப்பதினாயிரம் மாணவர் தொண்டர்களையும் ஒருங்கிணைக்கும் பணி
திருமதி சாவித்திரி சுமந்திரன் உடையது. இந்தியாவிலும் இவருடைய சபை கடுமையான
மதமாற்றம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நான்
கொடுத்திருக்கிற மேற்காணும் விளக்கங்கள் இணையதளங்களில் தாராளமாகக் கிடைக்கின்றன.
No comments:
Post a Comment