மார்கழி
16, 2049 (30.12. 2018)
மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு
மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு
வட மாகாண ஆளுநர் பதவி
மேதகு இரெசினால்டு கூரே அவர்கள் இந்துக்களின் இனிய நண்பர். இந்துக்களின்
நன்மைக்காக இலங்கை அரசிடம் கோரிக்கைகள் வைத்து நிறைவேற்றித் தருபவர்.
2019ஆம் ஆண்டிலிருந்து மாகாணங்களுக்குப் புதிய ஆளுநர்களை
நீங்கள் பதவியில் அமர்த்த உள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. உண்மை அறியேன்.
வடமாகாண ஆளுநர் மேதகு இரெசினால்டு கூரே அப்பதவியில் தொடர்வார் என்ற
நம்பிக்கையில் வடமாகாண இந்துக்கள் உள்ளனர்.
அவ்வாறு அவரை மாற்றுவதற்கு நீங்கள் ஏதாவது ஆலோசனையில் இருந்தால் தயவுசெய்து
கைவிடுமாறு இந்துக்கள் உங்களைக் கோருகிறார்கள்.
போரின் அவலங்கள் அழிவுகள் இழப்புகள் இவற்றிலிருந்து மீட்கும் முயற்சிகளில்
மக்களுக்கு ஆளுநர் இரெசினால்டு கூரே வலதுகையாவார்.
வடமாகாண வளர்ச்சியில் அவர் காட்டும் ஆர்வமும் அக்கறையும் அளப்பரியது.
முதல்நிலை உணவு உற்பத்தியான வேளாண்மை மீன்பிடி வளர்ச்சியில் புதிய
திட்டங்களைக் குறுகிய காலத்தில் வகுத்துள்ளார்.
ஞானத்தை நோக்கிய அறிவு வளர்ச்சியில் ஆர்வம் கொண்டு ஆசிரியர்களின் திறமைகளை
ஊக்குவிக்கிறார்.
தொழில் வளர்ச்சியில் வடமாகாணம் மேலோங்கத் திட்டங்களை வகுத்துள்ளார்.
வேலைவாய்ப்பைப் பெருக்க முதலீடுகளை ஊக்குவிக்க ஐரோப்பா சென்று பல நாடுகளில்
புலம்பெயர் தமிழர்களையும் செல்வந்தர்களையும் வல்லுனர்களையும் சந்தித்து
அழைத்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லாத சூழலில் அவரே வடமாகாணத்தை ஆள்கிறார்.
ஆட்சி அலுவலர்களை முடுக்கி மக்கள் நலப் பணிகளை முன்னெடுக்கிறார். அவர் அங்கு
இல்லையெனில் ஆட்சித் தொடர்ச்சி குறைந்துவிடும்.
வடமாகாண இந்துக்கள் தமது பாதுகாப்புக்கு மேதகு இரெசினால்டு கூரே அவர்களை நம்பி
இருக்கிறார்கள்.
மக்களின் குறைகளைக் காது கொடுத்து கேட்கிறார். போக்கக் கூடியவற்றைப்
போக்குகிறார். மக்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.
பொதுக்கூட்டங்களில் அவர் பேசும் தமிழின் இனிமையையும் உச்சரிப்பையும்
எடுப்பையும் சொல்லாட்சியையும் கேட்கும் தமிழர் வியக்கின்றனர்.
தமிழ்ப் பாடல்களை இசைக்கருவிகளோடு இனிமையாகப் பாடுகிறார். தமிழ் மக்களின்
இதயங்களைத் தொடுகிறார்.
ஆற்றல் மிக்க மாணவர்களை அழைத்துப் பாராட்டுகிறார். அவர்களின் வீடுகளுக்கு
நேரில் சென்று பரிசுகள் வழங்குகிறார், ஊக்குவிக்கிறார்.
அன்பால் ஆதரவால் இனிமையால் இன் முகத்தால் பேச்சால் செயலால் போருக்குப் பிந்தைய
தமிழரின் அச்ச உணர்வை போக்கித் தனி மனித ஆளுமைகளை வளர்க்கிறார்.
அனைத்து அரசியல் கருத்துகளையும் சமமாகக் கொள்கிறார். அரசியல் கட்சிகளை ஒக்க
நோக்குகிறார். அரசியல் சாராது பணியாற்றுகிறார்.
இந்துக்களுக்கும் புத்தர்களுக்கும் இடையே அண்மைக்கால உரசல்களும்
அவநம்பிக்கைகளும் குறைவதற்கு மேதகு இரெசினால்டு கூரே அவர்களின் ஆளுமையும் கருத்தோட்டமும்
பெரிதும் உதவுகின்றன. நல்லிணக்கம் மலர வாய்ப்புகள் அவரின் வழிகாட்டலில் உள.
இத்தகைய ஆற்றல் மிக்க திறமை மிக்க அரசியல் அநுபவம் மிக்க ஒருவரை எளிதில் வட
மாகாணம் இழந்து விட முடியாது.
மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களே,
வடமாகாண ஆளுநராக மேதகு இரெசினால்டு கூரே அவர்கள் தொடர ஆவன செய்யுமாறு வடமாகாண
இந்துக்கள் சார்பில் கோருகிறேன். நன்றி
அன்புடன்
இலங்கை இந்துக்கள் சார்பாக
மறவன்புலவு க.
சச்சிதானந்தன்
மேனாள் ஐநா ஆலோசகர்,
அமைப்பாளர் சிவ சேனை
Dated 30th
December 2018
To
His
Excellency
President of
Sri Lanka
Gubernatorial
Portfolio related to the Northern Province
Hindus in the Northern Province humbly request Your Excellency to defer
to cancel any proposed changes on the gubernatorial portfolio related to the
Northern Province, even if it is a matter of routine.
Incumbent Governor, Hon Reginald Cooray had been functioning to rebuild
the war devastated Northern Province through his compassionate approaches and
development oriented projects.
Focussing on improving primary productivity he encourages intense
developmental inputs in agricultural and fisheries sectors.
Prioritising growth of the knowledge base, he has restructured teaching
capabilities through administrative measures.
Encouraging investment to generate employment, he is soliciting broad
based participation and investment by the Tamil diaspora. To promote Northern
Province ‘investor friendly’, he has travelled extensively in Europe to meet
potential investors and expertise migrant Tamil participants.
He is in the saddle in the absence of an elected government. The developmental progress Hon Reginal Cooray
made in the fields of Agriculture, Fisheries, Education, Industries,
Investments cannot hang in the mid-air in his absence. Continuity of governance
is the absolute need, especially in the absence of an elected Provincial
Government.
Hindus of the Northern Province respect Hon Governor Reginald Cooray
with reverence. He is a popular Governor. His patiently listens to the
grievances of the poorest of the poor people. Wherever possible he provides the
required relief. He visits homes of exemplary performing students. He is in
Tamil literary functions, speaking with ease and comfort in Tamil, to the
admiration and disbelief of the native speakers. He sings Tamil songs with
instrumental support at public functions, reaching the hearts and souls of his
Tamil listeners. The rapport he
establishes, through his speech, songs, grass-root level contacts and
administrative performances, with the people of the Northern Province has
become legendary.
Respecting every shade of political opinion, coupled with an apolitical
approach, Hon Reginald Cooray is very popular with all politicians and
political parties in the Northern Province.
We the Hindus of the North are so pleased with the excellent
performance of the Governor; we wish to have him with us to guide us towards
healing the wounds in bringing about the emotional and cultural reconciliation
with the Buddhists of Sri Lanka.
Your Excellency may be pleased
to defer to cancel any decision, if you have made, to bring any change in the
gubernatorial portfolio related to the Northern Province.
Thanking you
I remain,
On behalf of the Hindus of the Northern Province, organiser of Siva
Senai,
Maravanpulavu K. Sachithananthan
Formerly UN/FAO consultant,
Maravanpulavu, Chavakachcheri.
Phone +94 772754964, email: tamilnool@gmail.com
No comments:
Post a Comment