29.01.2003 ஒலுவில் பிரகடனம்
இதன் போது முன்வைக்கப்பட்ட உடன்படிக்கை கோரிக்கைகளில்.....
. சமஷ்டி முறைத் தீர்வில் முஸ்லிம்களின் சுயாட்சி பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
2. வடக்கு கிழக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்குடியேற்றத்திற்கென வெளிநாடுகளிலிருந்து பெற்றபடும் நிதி, நியாயமான முறையில் முஸ்லிம்களுக்கு பகிர்தளிக்கப்பட வேண்டும்.
3. பிளவுப்பட்டிருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள், முஸ்லிம் சமூக நலனை மட்டும் கருத்தில் கொண்டு ஒன்றுசேர வேண்டும்.
4. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை சம அந்தஸ்துடன் தனித்தரப்பாக வெளிப்படுத்துவதற்கு சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒவ்வொரு கட்டத்திலும் இடமளிக்கப்பட வேண்டும்.
5. இறுதித் தீர்வு வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் சம்மதத்துடனேயே எய்தப்பட வேண்டும்.
6. வடக்கு கிழக்கிற்கு வெளியே தென்னிலங்கையில் சிதறி வாழும் எமது சகோதர முஸ்லிம் மக்களது சமூக, பொருளாதார, அரசியல் ,கலாசார உரிமைகள் நியாயமான முறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக குரல் எழுப்புவதும் போராடுவதும் எமது கடப்பாடாகும்.
No comments:
Post a Comment