Saturday, June 17, 2017

சிவிகே சிவஞானம்

1974 சனவரி 7ஆம் நாள் யாழ் மாநகராட்சிக் கணக்காளர் சிவிகே சிவஞானத்துடன் பேசினேன். அக்காலம் துரையப்பா சென்னையில். ஆணையாளர் விடுப்பில். என்னுடன் கட்டுபெத்தை மாணவர் இருவர் வந்திருந்தனர். 

10.1 நிகழ்ச்சிக்குத் திறந்தவெளி அரங்கைக் கேட்டோம். தர மறுத்தவர் சிவஞானம். எங்களை முகம் கொடுத்துப் பார்க்காமல் மேசையில் உள்ள தாள்களைப் பார்த்தவாறே பேசினார். 

8.1 துரையப்பா சென்னையில் இருந்து வந்தார். 10.1 கண்காட்சியைத் திறக்க விரும்பினார். சிவஞானம் துரையப்பாவுடன் இருந்தார். 

10.1 மாலை யாழ் விடுதிவீட்டில் rest house துரையப்பாவையும் மாநகரசபைக் கணக்காளரையும் காவல்துறையினரையும் கண்டவர் நம்சிவாயத்தார். 

அவர் மாலை 0500 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் என்னைச் சந்தித்தார். தான் கண்டதைச் சொல்லி, கவனமாக இருக்குமாறு எச்சரித்தார். துரையப்பாவின் முகம். சரியில்லை. கவனம் சச்சி எனக் கூறினார். என் கூட இருந்தவர் சிவகுமாரன். 

பின்னர், இளைஞர் துரையப்பாவுடன் மோதியதைச் சிவஞானம் அறியாரா? 

1980களில் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தபொழுது, வழக்கறிஞர் இ. பாலசுப்பிரமணியம் முற்றவெளிக்குப் பிரேமதாசருடன் போனார். 
உடைந்திருந்த நினைவுச் சின்னத்தைப் பிரேமதாசருக்குக் காட்டினார். மீளக் கட்டித்தருமாறு கேட்டார். மீளக் கட்டுமாறு பிரேமதாசர் உடனே ஆணையிட்டார். பிரேமதாசரின் ஆணையை நிறைவேற்றியவர் சிவஞானமாக இருக்கலாம். மீளமைத்தவர் சிவஞானமல்ல.

என் பெயரில் இந்தப் பதிவு. நான் அஞ்சாமல் என் பெயரிலேயே எழுதுகிறேன். இலங்கைக் கட்சி என்ற மறைவில் பேசுவது யார். முகத்தை மறைப்பது ஏன்? அஞ்சுவது ஏன்? 

இலங்கைக் கட்சி என்ற மறைவில் இலங்கைக்கும் கட்சிக்கும் இடையே முன்பு சுதந்திர இப்பொழுது தமிழரசு? இனித் தமிழ் மக்கள் பேரவையிலும் சேர்பவரோ?

எடுபிடி, நப்பாசை, பொய், போக்கிலி எனச் சொல்பவர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவாறு மறைந்து மறைந்து ஒளிந்து ஒளிந்து கரந்து கரந்து பதுங்கிப் பதுங்கிச் சொல்கிறாரோ?

சிறீமாவோ ஆட்சியை மீறித் தமிழாராய்ச்சி மாநாட்டை 1974இல் நடத்தாமல் துரையப்பாவுக்குஎடுபிடியாக இருந்தேனா? 

1961 தொடக்கம் ஈழத்துக்காக வாழும் நான் இதுவரை ஏதாவது ஓர் அரசியல் பதவிக்கு நப்பாசை கொண்டேனா? பதவியில் இருந்துகொண்டே சுமந்திரன் வழி சிங்களத்துக்கு அடிமையானேனா?

பொது அமைப்புகள் பலவற்றில் உலகெங்கும் 25 நாடுகளில் பணியாற்றிய நான், கூட்டுறவுக் கணக்கில் பொய் சொன்னேனா? மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தேனா?

போக்கிடமின்றிக் கட்சி மாறிக்கொண்டே போக்கிலியாக இருந்தேனா? 

சென்னைச் சிறைக்கு அஞ்சி சிங்களத்திடம் மண்டியிட்டேனா? பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளுக்கு அஞ்சி யாருக்காவது வால்பிடித்தேனா?

No comments: