https://youtu.be/c4Z-3LPfk0s?
Thursday, October 31, 2024
நாகவிகாரைப் புத்த பிக்குவும் நானும்
சைவ புத்த நல்லிணக்கம் - நாகவிகாரை
ஐப்பசி 10 ஞாயிறு (27 10 2024)
உடைக் கொடை நிகழ்வு
யாழ்ப்பாணம் நாக விகாரை.
சிவ சேனை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஆற்றிய உரை.
மேன்மை உறு தவத்தின் மிகை நிறை மன ஒடுக்கத்தில் சிறந்து விளங்கும் நாக விகாரைப் பீடமுதல்வர் தவத்திரு விமல தேரர் அவர்களே,
தவத்தின் தவமாக வாழ்கின்ற புத்த சமயத்தவர்களே, சைவ சமயத்தவர்களே
இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்ற உயர்திரு சிதம்பரம் மோகன் அவர்களே
மேதகு ஆளுநர் வேதநாயகன் அவர்களே
வடமாகாண முதன்மைச் செயலர் திரு இளங்கோவன் அவர்களே
வட மாகாண படைத்தளபதி அவர்களே
யாழ்ப்பாணக் காவல்துறைத் தலைவர் அவர்களே
இமயம் தொடக்கம் குமரி வரை நீண்ட, சிந்து தொடக்கம் பிரமபுத்திரை வரை அகன்ற, பாரதத்தின் தலைவர் மாண்புமிகு மோடி அவர்களின் சார்பில் இங்கே வந்திருக்கும் இந்திய அரசின் துணைத் தூதர் உயர்திரு சாய் முரளி அவர்களே,
சிவ சேனை அணியினரே
சைவ சமயப் பெரியார்களே
புத்த சமயச் சீடர்களே
தாய்மார்களே குழந்தைகளே
நிறைமதியும் உரோகினி மீனும் வானத்தில் கூடி வந்த நாள்.
பெரிதும் முதிர்ந்த பார்ப்பான் மறை ஓதி வழிகாட்டினன்.
சாலி என்றும் அருந்ததி என்றும் கூறப்படும் வடமீனாகிய துருவமீன் போன்ற கற்புடையவள் கண்ணகி. அவள் கையைப் பற்றிக்கொண்டு கோவலன் திருமண வேள்வித் தீயைச் சுற்றி வலம் வந்தான்.
சைவ முறைத் திருமணம். கண்ணகியும் சைவப் பெண் கோவலனும் சைவ மகன். இருவரும் சைவத் தமிழர். சைவத் தமிழ் தேசியத்தின் அன்றைய வெளிப்பாடு இத்திருமணம். இளங்கோவடிகள் அவ்வாறு விரிக்கிறார்.
சைவத் தமிழ்த் தேசியத்தின் வடிவம் கண்ணகி. அவளின் பெற்றியால் அவள் வழிபாட்டுக்கு உரியவள் ஆனாள். எனவே தமிழர் அவளை வழிபடுவர். கோயில் கட்டி வழிபடுவர். இலங்கையிலும் வழிபடுவர். தமிழ்நாட்டிலும் வழிபடுவர்.
மலையாளிகள் வழிபடுவதில்லை. தெலுங்கர் வழிபடுவதில்லை. கன்னடர் வழிபடுவதில்லை. மராட்டியர் வழிபடுவதில்லை. இராசபுத்திரர் வழிபடுவதில்லை. மிதிலையர் வழிபடுவதில்லை. நேபாளியர் வழிபடுவதில்லை. வங்காளிகள் வழிபடுவதில்லை. நாகலாந்தார் வழிபடுவதில்லை. காஷ்மீரத்தார் வழிபடுவதில்லை. கலிங்கர் வழிபடுவதில்லை. உலகில் எந்த இனத்தவரும் வழிபடுவதில்லை.
ஒரே ஒரு விதிவிலக்கு. இலங்கையின் சிங்களப் புத்தர் கண்ணகியை வழிபடுகிறார்கள். சைவத் தமிழ்ப் பெண்ணை வழிபடுகிறார்கள். சைவத் மதமிழ் தேசிய மரபு காத்த பெண்ணை வழிபடுகிறார்கள்.
புத்தர்கள் உலகெங்கும் இருந்தாலும் எவரும் கண்ணகியை வழிபடுவதில்லை. சிங்களம் பேசுகின்ற புத்தர்கள் மட்டுமே கண்ணகியை வழிபடுகிறார்கள்.
சிங்களம் பேசும் கிறித்தவர் வழிபடுவதில்லை. சிங்களம் பேசும் முகமதியர் வழிபடுவதில்லை.
சிங்களப் புத்தமும் சைவத் தமிழும் இணைகின்ற நேர்கோடு கண்ணகி வழிபாடு.
கண்ணகியை வழிபடுங்கள் எனத் தமிழர்கள், சிங்கள புத்தர்கள் மீது திணிக்கவில்லை.
பத்தினிக் கோவில் இல்லாத விகாரை இலங்கையில் இல்லை. பத்தினியை வழிபடாத புத்தர்கள் இலங்கையில் இல்லை.
1800 ஆண்டுகளாக ஆடி மாதத்தில் பத்தினிக்கு விழா எடுக்கும் மரபை இன்னமும் புத்தர் கைவிடவில்லை
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன். சிலப்பதிகார வரி. புத்த மன்னனாகிய கயவாகு, கண்ணகிக்குக் கல் எடுத்த விழாவில் கலந்து கொண்டான். சேர நாடு சென்றான். செங்குட்டுவன் அழைத்துச் சென்றான். பல நாட்டு அரசர்கள் சூழ அந்த விழாவில் கலந்து கொண்டான்.
இலங்கை மீண்டான். ஆண்டுதோறும் அநுராதபுரத்தில் ஆடி மாதத்தில் கண்ணகிக்கு விழா எடுத்தான். வான் மழை வழுவாது பொழிந்தது. வளம் பல பெருகியது. குன்றாத விளைச்சல் உள்ள நாடாயிற்று. சிலப்பதிகாரம் கூறும் செய்தி.
1800 ஆண்டுகளாகச் சைவத் தமிழ்ப் பெண்ணாகிய கண்ணகிக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கும் ஒரே ஒரு இனம், சைவத் தமிழரல்லாத இனம், இலங்கைப் புத்த இனம்.
இலங்கையில் சைவர்களுக்கும் புத்தர்களுக்கும் நல்லிணக்கம் தொடர்ச்சியாக இருந்து வந்ததற்கு வேறென்ன சான்று வேண்டும்?
சைவர்கள், புத்த சமயத்தை வெறுப்பவர்கள் அல்லர்.
புதிது என்ற தமிழ்ச் சொல். வேதத்தில் இருந்து மாறிப் புதிய கருத்தைச் சொன்னவர் என்பதால் அவர் புத்தர். புதிது என்ற தமிழ் வேர்ச்சொல்லின் வெளிப்பாடு புத்தர் என்ற சொல்.
புதியதாய் சொன்னவரே புத்தர். மனித வரலாற்றில் நமக்குத் தெரிந்த ஞானிகளுள் புத்தர் முதன்மையானவர்.
மறத்தை வாழ்வாகக் கொண்டவர். அரசு வாழ்வுக்குரியவர். துறவியானார். அறத்தைப் போதிப்பவர் ஆனார். வன்முறை வேண்டாம் அறவழி வேண்டும் என்றவர் புத்தர்.
அதனால் அவர் மீது எனக்கு ஈடுபாடு. வற்றாத ஈடுபாடு. அவருடைய வாழ்க்கையைப் படித்தேன். அவர் விட்டுச் சென்ற சிலவற்றைப் படித்தேன். தம்ம பதத்தைப் படித்தேன். இரட்டை மணிமாலை ஒழுங்கில் அமைந்தது தம்ம பதம்.
அவர் கௌதம சித்தார்த்தராகப் பிறந்தது இன்றைய நேபாளத்தின் உலும்பினியில். புத்தர் மீதுள்ள ஈடுபாட்டினால் நான் உலும்புனி சென்றேன். அவர் பிறந்த மரத்தின் கீழ் நின்றேன் அந்த மரத்திற்கு அண்மைத்ததாக அசோக மன்னர் கட்டிய நினைவுத் தூணைக் கண்டேன்.
கௌதமர் வாழ்ந்த கபிலவத்து சென்றேன். உரோகிணி ஆற்றைக் கண்டேன். ஆற்று ஓரத்தில் அவர் வாழ்ந்ததாக கூறும் இடிபாடுகளுடன் கூடிய வீட்டையும் கண்டேன்.
புத்தர் ஞானம் பெற்ற கயா சென்று இருக்கிறேன். அரச மரத்தின் கீழ் நின்று இருக்கிறேன் எனக்கும் ஞானம் வருமா? என்ற ஏக்கம்.
சாலை மரங்களின் இரண்டின் இடையே ஊஞ்சல் கட்டி, தன் இறுதி நாளில் ஆனந்தர் அருகில் மூச்சை நிறுத்திய குசிநாராவுக்கும் சென்றேன்.
இலங்கைப் பெரியார் வானொலி புகழ் சோ. சிவபாதசுந்தரம் அவர்கள் எழுதிய ‘கௌதம புத்தர் அடிச்சுவட்டில்’ என்ற நூலை முழுமையாகப் பலமுறை படித்தேன்.
மகாநாமர் எழுதிய மகாவமிசத்தைப் பலமுறை படித்தேன். அதைத் தொடர்ந்த குலவமிசம் படித்திருக்கிறேன்.
ஆயுதப் படைகளே இருந்த காலத்தில் அமைதிப் படையை உருவாக்கிய முதலாவது மனிதர் புத்தர்.
பிச்சை எடுப்பவர்கள் என்றதன் சுருக்கமான பிக்குகள், அவர் அமைதிப்படையின் வீரர்கள்.
குசிநாராவில் புத்தர் இறக்கிறார். பரந்து வாழ்ந்த பிக்குகள் இடையே செய்தி பரவுகிறது. பற்றற்றபுத்த துறவிகளுக்கு அது செய்தி. துறக்க முனைவோருக்கு வருத்தத்தைத் தந்த செய்தி.
துறந்தும் துறவாத, பற்று நீங்கியும் நீங்காத, புத்த பிக்குகளான சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்த செய்தி. அவர்கள் கொண்டாடினார்கள். சுபத்தர் தலைமையிலான கூட்டத்தினர் புத்தர் இறந்ததைக் கொண்டாடினார்கள். கட்டுப்பாடுகள் நீங்கி விட்டனவே என ஆர்ப்பரித்தார்கள்.
சுபத்தர் தேரர் தலைமையில் புத்த பிக்குகளின் பிறழ்ச்சியே, புத்தர் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கிய பிறழ்ச்சியே, புத்தர் இறந்த நான்கு மாதங்களுக்குப் பின் பரந்து வாழ்ந்த 400-500 புத்த அறிஞர்களைக் கொண்டு காசியப்பர் தலைமையில் முதற்சங்கம் கூடியதன் காரணம்.
அறம் சார்ந்த புத்தரின் கோட்பாடுகளை ஆனந்தர் எழுதினார்.
வினை சார்ந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளை உபாலி எழுதினார்.
அறத்துக்குத் துணையான நூல்களை காசியப்பர் தொகுத்தார்.
அறக்கோட்பாடு என்ற தர்மம். ஒழுக்கக் கோட்பாடு என்ற வினை. அற நூல்களின் தொகுப்பான அபிதர்மம்.
மூன்றும் முதற் சங்கத்தின் பெறுபேறுகள்.
சுபத்தரின் பிறழ்ச்சிக் கருத்துகளுக்கு மாற்றாக எழுந்தன இம்மூன்றும்.
இன்று வரை நிலைத்துள்ளன அவை, புத்த மக்களுக்குப் பொதுவாகவும், புத்த பிக்குகளுக்குச் சிறப்பாகவும் அமைந்த வழிகாட்டல்கள்.
புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின் புத்த பிக்குகளிடையே முரண்பாடுகள் மீண்டும் வெடித்தன.
காட்டில் வாழ்ந்த புத்த பிக்குகள் அறத்தையும் வினையையும் அபிதர்மத்தையும் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியதால் விசாலியில் வாழ்ந்த புத்த அறிஞர்கள் மீண்டும் இரண்டாவது சங்கத்தைக் கூட்டினர்.
மன்னன் கரிஅசோகன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான்.
மௌரிய அசோகனின் காலத்தில் புத்த பிக்குகளுடைய மீண்டும் குழப்பம். எஃது அறம்? எது வினை? எஃது அபிதருமம்? என்ற குழப்பத்தால் அசோகன் பாடலிபுரத்தில் மூன்றாவது சங்கத்தை கூட்டினான்.
இருமுறை அழைத்தும் வர மறுத்த முகலிப்புத்ததீசரை மூன்றாவது முறை அழைத்து வந்து புத்த நெறிகளை ஒழுங்கு செய்வித்தான்.
இலங்கையிலும் மியான்மாரிலும் நான்காவது ஐந்தாவது சங்கங்கள் நடைபெற்றன புத்த பிக்குகளிடையே அறக்கோட்பாட்டில் தெளிவின்மை, ஒழுக்கக் கட்டுப்பாடு இன்மை, எனவே இந்தச் சங்கங்களின் கூட்டம் ஒவ்வொரு முறையும் நடந்தது.
நாக விகாரதிபதி அவர்களே
புத்த பிக்குகள் இடையே இன்றும் அதே நிலையே உண்டு. காலத்துக்கு காலம் இலங்கையில் புத்த பிக்குகளின் நெறிமுறைகளை அரசர்கள் வகுத்து வந்தனர். தஞ்சாவூரின் தமிழ் பிக்குவை அழைத்து விசுத்தி மார்க்கம் என்ற நூலை எழுதிவித்தனர்.
கட்டிக் காக்கவும் என்ற தலைப்பில் கல்வெட்டுகளை எழுதினர். புத்த பிக்குகளுக்காக எழுதினர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் சோழர் காலம். பொலநறுவையில் பாண்டிய இளவரசன் முதலாம் விசயபாகனின் ஆட்சியே சோழரை வெளியேற்றியது.
சோழர் ஆட்சியில் நலிந்த புத்தத்தின் கட்டுக்கோப்பை மீள அமைக்கக் கட்டிக் காக்குக கல்வெட்டுகளை அமைக்கத் தொடங்கியமை இக்காலத்திலேயே.
பாண்டிய இளவரசனாகிய முதலாம் பராக்கிரமபாகன், அவனைத் தொடர்ந்து கலிங்க மாகனை வீழ்த்திய மூன்றாம் விசயபாகன், அவனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிறந்த மகன் இரண்டாம் பராக்கிரமபாகன் எனப் பொலநறுவை மன்னர்களும், தம்புள்ளை மன்னர்களும் கட்டிக் காக்குக எனக் கல்வெட்டுகளைப் புத்த மத பிக்குகளின் ஒழுக்கக் கேடுகளைக் குறைப்பதற்காக எழுதி வைத்தனர்
ஒருவர் துவராடை அணிந்தால் பிக்குவாக முடியாது. சைவ நாயனார் திருஞானசம்பந்தர் இதைத் தனது திருக்கேதீச்சர தேவாரப் பதிகத்தில் சொல்கிறார்.
அறம், வினை, அபிர்தர்மம் ஆகிய கோட்பாடுகளுக்க அமைய வாழ்பவர்கள் உண்மையான புத்தர். அவர்களோடு சைவர்களுக்கு எந்த விதமான மோதலும் இல்லை. இதைத் திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
துவராடையை அணிந்து, புத்தபிக்கு என்று சொல்லி, புத்த ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்காதவர்களையே நாங்கள் எத்தர் எனச் சொல்கிறோம். அவர்கள் புத்தர் அல்லர் எத்தர். திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
நாக விகாரைப் புத்தத் துறவி அவர்களே, இங்கு குழுமியுள்ள ஏனைய புத்தர்களே, சைவ சமயத்தவர் ஆகிய நாங்கள் திருஞானசம்பந்தர் சொல்வதையே உங்களுக்குச் சொல்கிறோம்.
ஆனந்தர், உபாலி காசியப்பர் முகலிபுத்தீசர் ஆகியோர் காட்டிய வழிகளை நாங்கள் சொல்கிறோம்.
கட்டிக் காக்குக கல்வெட்டு வரிகளை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
திருஞானசம்பந்தர் சொன்ன வரிகளை நினைவூட்டுகிறோம்.
இப்பொழுது உள்ள அரசுக்கு மாபெரும் பொறுப்பு உள்ளது. ஆறாவது சங்கத்தைக் கூட்ட வேண்டும். புத்தத் துறவிகளான அறிஞர்களைக் கூட்ட வேண்டும். தமிழ்ப் புத்த பிக்கு எழுதி உங்களுக்குத் தந்த விசுத்தி மார்க்கம் நூலைப் பதிப்பிக்க வேண்டும். கட்டிக் காக்குக கல்வெட்டு வரிகளை மீளப் பதிப்பிக்க வேண்டும்.
மன ஒடுக்கத்தில் நாட்டம் இல்லாத, வரம்பு மீறும், எல்லை மீறும், அறம் பிறழும், வினை மீறும், தம்ம பதத்தைத் துச்சமாக மதிக்கும் பிக்குகளை மீட்க வேண்டும்.
இன்று உடைக் கொடைக்கான நாள். புத்த மக்களோடு சைவ மக்கள் இந்த அவையிலே பெருமளவு கூடி இருக்கிறோம். இந்த நன்னாளில் சைவர்கள் சார்பில் உங்களுக்கு நான் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறேன்.
வரலாற்றுப் பெருமை கொண்ட, சைவ சமய புத்த சமய நல்லிணக்கத்தை நோக்கி இந்த வேண்டுகோளை உங்கள் முன்வைக்கிறேன். புத்த சங்கத்தைக் கூட்டுங்கள். கட்டிக் காக்குக katikavatha கல்வெட்டு வரிகளை மீளப் பதிப்பியுங்கள். தம்மபதம் வரிகளுக்கு உயிர் கொடுங்கள்.
சைவ புத்த நல்லிணக்கமே இலங்கையின் வளர்ச்சிக்குரிய அடித்தளம்.
நன்றி வணக்கம்
Aipasi 10, Sunday (27 10 2024)
Vasthira Dhana Event
Jaffna Naga Viharai.
Speech by
Siva Senai
Maravanpulavu K. Sachithanandan
Venerable Vimala Thera of the Naga Vihara who excels in
the greatness of penance,
Venerable Buddhist priests assembled here
Revered Saiva priests and devotees of Lord Siva,
A true leader, Chidambaram Mohan Aiyah
His Excellency the Governor Vedanayakan,
Respected Chief Secretary of the Northern Province Mr. Ilangovan
Respected Commander of the Northern Province
Respected Deputy Inspector General of Police, Jaffna
Respected Sai Murali, Consul General of the Government of India, who is here on
behalf of Prime Minister Narendra Modi, who rules over the land mass stretching
from the Himalayas to the Kumari and the Indus to the Brahmaputra,
Shiv Sena members, Saivaite elders, Buddhist disciples, respected mothers and
lovely children.
On the full moon day when the Urogini constellation group gathered in the sky,
the mature seer conducted the wedding ceremony according to Saiva rituals.
Kannagi was chaste like Dhruva star of the northern constellation called Sali
and Arundhati.
Holding Kannagi's hand, Kovalan walked around the sacred fire. Saiva marriage of Kannagi, a Saiva woman, and Kovalan a Saiva son.
Both were Saiva Tamils. This marriage was the
manifestation of the Saivaite Tamil nationalism of the day. Ilangovadigal enlarges
the event in his lucid Tamil poetic style.
Kannagi is a manifestation of Saivaite Tamil nationalism. Because of her
noble deeds, she became worthy of worship.
So Tamils worship her. They build Saiva temples to worship her. She is
worshiped in Sri Lanka. She is also worshiped in Tamil Nadu.
Malayalees do not worship Kannagi. Telugus do not worship Kannagi. Kannadigas
do not worship Kannagi. Marathas do not worship Kannagi. The Rajputs do not
worship. Mithilaites do not worship Kannagi. Nepalese do not worship Kannagi.
Bengalis do not worship Kannagi. Nagalanders do not worship Kannagi. Kashmiris
do not worship Kannagi. Kalingars do not worship Kannagi. No race in the world
worships Kannagi.
There is only one exception. Sri Lankan Buddhists worship
Kannagi. If a Saiva Tamil worships Kannagi it is according to their Saiva
Tamil national tradition.
Although there are Buddhas are all over the world, no one worships Kannagi.
Only Sinhala-speaking Buddhists worship Kannagi.
A Sinhala-speaking Christian does not worship Kannagi. Sinhalese-speaking
Mohammedans do not worship Kannagi.
Kannaki worship is the direct common link between Sinhala
Buddhism and Tamil Saivaism.
The Saivaite Tamils did not impose on the Buddhas, the practice of
worshipping Kannagi. Every Buddhist monastery in Sri Lanka has a Pathini
temple. All Sri Lankan Buddhists in Sri Lanka worship Kannagi as Pathini. For
1800 years, the Sri Lankan Buddhists have not given up the tradition of holding
a festival in the month of Adi for Kannagi as Pathini.
Gajabhu I is from the ocean surrounded - Sri Lanka. The Buddhist king
Gajabhu I attended the ceremony of paying homage to the glorified deity of
Kannagi in Kerala. He went to Kerala. King Chenkudduvan
invited him. He attended the ceremony surrounded by a galaxy of
rulers from all parts of India.
He came back to Sri Lanka. Every year in Anuradhapura, he performed a festival
for Kannagi in the month of Adi. Thereafter the rains never failed
the kingdom. Wealth multiplied in the kingdom. All tillable land became
fertile. Thus Ilangovadigal writes in the Tamil epic, Silapathikaram.
For 1800 continuous years, the only non-Saivite non-Tamil tribe in the
entire globe, the Sri Lankan Buddhists, has been holding the annual
ceremony for Kannagi, a Saivaite Tamil woman.
What further do we need as proof of the continuous harmony, goodwill, and
well-wishingness, between Saivaites and Buddhists in Sri Lanka?
Saivaites are great admires of Lord Buddha and his teachings.
Tamil word for new is 'Puthu'. He is named Buddha because he deviated from the
Vedas and gave a totally new concept. The word Buddha is a derivative of the
Tamil root word 'Puthu'.
Buddha is the one who said something new. Buddha is the foremost sage known to
us in human civilizational history. He who lived to elevate human
personality towards the fittest in evolution. He became a saint. He became
a teacher of virtue. Buddha was the one who said no to violence and yes to
moral values. He was guiding us towards the fittest gene mutations.
So much so, I am
in perennial commitment to his guidance. I read his life. I read some of
his teachings that he left behind. I read Dhamma pada. The Dhamma pada is
arranged in couplets with the first being on values, the second being
on guidance towards the value.
He was born as Gautama Siddhartha in Lumbini, in the present-day Nepal. I
travelled to Lumbuni because of my devotion to Buddha. I stood under the tree
where he was born and admired the memorial pillar built by King Ashoka near
that tree.
From Lumbini I went to Kapilavastu, where Gautama lived.
I saw the Rogini River. I saw the ruins on the banks of the river where he was
said to have lived.
I have been to Gaya many times where Buddha became enlightened. Standing under
the tree, will I be longing for enlightenment?
On a swing between two Sala trees, Buddha breathed his last with Ananda by his
side. I travelled to Kucinara.
Sri Lankan broadcaster S. Sivapadasundaram wrote a book in Tamil,
"Following the footprints of Buddha." I read it in entirety
several times.
I have read the translation of Mahavamsam written by Mahanamar many times. I
have also read the translations of Chulavamsam.
Buddha was the first to create a peacekeeping force. He built an army of
non-violence. Bikkus (those with a bowl) became members of his Peace
Corps.
When Buddha passed away at Kucinara, the news reached all bhikkhus who
lived far and wide. The detached ones heard it as news. Partially detached
monks were disappointed. Very few celebrated on hearing. 'Oh we are free
now' they rejoiced.
Buddhist bhikkhus under the leadership of Subathar Thera were detractors. This distraction,
which began during the Buddha's lifetime, was the reason for the assembly of
the First Sangam under the leadership of Kasiyapa with 400-500 Buddhist
scholars who lived far and wide. They assembled after four months of Buddha’s
passing away.
Ananda wrote the Buddha's teachings on virtue, Dharma.
Upali wrote verbatim morals, Vinaya.
Kasyapar compiled the Abidharma.
The Dharma on values, the Vinaya on discipline and Abhidharma, a collection of moral texts. All three are the results of the first distraction.
All these three arose as an alternative to Subathar's heretical views.
They remain to this day as guidelines for Buddhists in general and Buddhist bhikkhus in particular.
A hundred years after the Buddha's death, discord broke out again among the Buddhist monks. The Buddhist monks who lived in the forest adapted Dhrama, Vinaya and Abhidharma to suit themselves. So the Buddhist scholars who lived in Visali again convened the Second Sangam. King Kari Asokan made arrangements for this virtuous meeting.
Confusion amongst Buddhist bhikkhus arose during the time of Mauryan Asoka. What is virtue? What is the morality? What is Abhidharuma? Because of the confusion, Asoka convened the Third Sangham at Patalipuram.
Mughalipputtatheesar, who had refused the king’s invitation twice, agreed when pressed. Mughalipputtatheesar the Buddhist norms.
The fourth was in Sri Lanka and fifth was recently in Myanmar. Sanghas were held among Buddhist bhikkhus as there was misinterpretation to suit selfish motives.
Most Venerable Naga Vikaradhipati swami,
The same is true even today among Buddhist bhikkhus. From time to time, kings used to lay down the code of ethics of Buddhist monks in Sri Lanka. They even called a Tamil Bhikkhu from Thanjavur who wrote the Vishuthi Maarkam.
Chola period in Sri Lanka was around a thousand years ago. It was the prince Vijayabahu I of Pandyan descent at Polanaruwa who drove awaythe Cholas.
It was during this period that inscriptions were erected to guide the Bikkus, whose morals underwent decay during the Chola regime.
The Pandya prince Parakramabhahu I, of Pandyan descent, followed by Vijayabhahu III, (who defeated Kalinga Maga), and Parakramabhahu II, (the son born to Vijayabahu III and the Pandya princess), arranged for the codification of coduct by Bikkus. Polanaruwa and Dambulla royal houses were erecting inscriptions to guide the lay Buddhists and Bikkus.
One cannot become a bhikkhu if he wears the yellow robe. Those who live according to the principles of Dharma, Vinaya and Abhidharma are true Buddhas. Saiva Nayanaar Thirunnasambandar says this in his Thiruketheechara Devara Padhikam.
Shaivaites have no conflict with those who are true followers of Buddhism. Those who externally wear yellow robes with harmful intentions internally towards Saivaites are the detested ones, Saiva Nayanaar Thirunnasambandar says.
Venerable Thera of Naga Vihara, and other Venerable priests gathered here, we Saivaites are telling you what Thirunnasambandar said 1400 years ago. Follow the path shown by Ananda, Upali, Kasyapar, Visali Theras, Mughaliphutheesar. We remind you of the Visuthi Maarakakm text. We remind you of the lines by Thirunnasambandar.
The SriLankan government has a huge responsibility. The Sixth Sangam should be convened. Buddhist monks and scholars should gather to guide the heretical Bikkus towards the noble paths. Vishuddhi Maarkkam by the Tamil Bikku from Thanjavoor, requires a simplified Sinhala translation with high quality reprint for wide distribution. The lines of the Protective Guidelines – Katikavatha - in the inscriptions of Polanaruwa and post-Polanaruwa kings require to be edited and codified to suit the present situation for wide circulation.
Bhikkhus who are prone to mental depression, who transgress limits and boundaries, who deviate from virtue, who disrespect the Dhamma should be rescued to be rehabilitated.
Buddhists and Saivaites are gathered in large numbers in this house. On this auspicious day, I present this request to you on behalf of Saivaites.
I present this request to you towards the continuing the historic Saivaism-Buddhism harmonious co-habitation in Sri Lanka.
Saiva-Buddhist harmony is the foundation for Sri Lanka's peace harmony, progress and development.
Thanking you
I remain
Sunday, August 18, 2024
கச்ச தீவு கார்த்திகேய பாண்டியன்
#கச்சதீவு_வரலாறு.
மு.கருணாநிதி தாரை வார்த்த கச்சத் தீவை நான் மீட்பேன் என்றார். ஜெ.ஜெயலலிதா அவரின் பெயரில் ஆட்சி செய்தவர்களும் மீட்கவில்லை மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலினாவது இதை செய்வாரா???
இது சாத்தியமா??
கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது.
அதாவது, சென்னை சென்ட்ரலுக்கும், தாம்பரத்துக்கும் உள்ள தூரத்தை விட குறைவானது.
கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது.
முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும்.
1480 ம் ஆண்டில் ஏற்ப்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்ப்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின.
01 ராமேஸ்வரம்
02 குந்துகால்
03 புனவாசல்
04 முயல் தீவு
05 பூமரிசான் தீவு
06 முல்லைத் தீவு
07 மணல் தீவு
08 வாலித் தீவு (கச்சத் தீவு)
09 அப்பா தீவு
10 நல்ல தண்ணீர் தீவு
11 உப்பு தண்ணீர் தீவு
12 குடுசடி தீவு
கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு.
23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்று குறிப்பு 11891ம் பக்கம் 14ல் இதற்கான ஆதாரம் உள்ளது. 1480 ம் ஆண்டு தோன்றிய இத் தீவுகள் யாவும் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தன.
1802ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஜமிந்தாரி நில உரிமைச் சட்டப்படி கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவிற்கு அரசுடமையாக்கப்பட்டது. அதற்கு பிறகு ராமநாதபுரம் ராஜா அவர்கள் அந்த இடத்தை தனி நபர்களுக்கு குத்தகையாக கொடுத்து அவர்கள் மூலமாக பயன் பெற்று இருகின்றனர்.
1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.
1947 ம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வரும் வரையில் கச்சதீவு சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இதற்கு 1822 ம் ஆண்டிலிருந்து நிறைய சான்றுகள் உண்டு. கிழக்கிந்திய கம்பெனி 1822ல் இஸ்திமிரர் சனட் என்ற ஒப்பந்தத்தில் ராமநாதபுரம் ராஜாவிடமிருந்து கச்சத்தீவை பயன்படுத்தி கொள்ளும் உரிமை பெற்றது. 69 கடற்கரை ஊர்களும் 8 தீவுகளும் சேதுபதிக்கு உரியது. இந்த 8 தீவுகளில் ஒன்று தான் கச்சத்தீவு. கிழக்கிந்திய கம்பனி இவை யாவற்றையும் பயன்படுத்தி கொள்ள ராஜாவிடம் இருந்து இசைவு பெற்று இருந்தது.
இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கை பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லையை பற்றி குறிப்பிடும் போது கச்சத்தீவை குறிக்காமலும், ராமநாதபுரம் அரசை பற்றி குறிப்பிடுகையில் கச்சத்தீவு அவருக்கு உரியதென்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை முந்நாளைய இலங்கை அமைச்சரவை செயலாளர் பி. ஈ. பியரிஸ் உறுதிபடுத்தி உள்ளார்.
1947 டிசம்பர் திங்களில் சண்முக ராஜேந்திர சேதுபதியிடமிருந்து வீ. பொன்னுசாமி பிள்ளை, கே.எஸ். மொகம்மது மீர்சா மரைக்காயர் ஆகிய இருவரும் கச்சத்தீவை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
இலங்கையின் பழைய வரலாற்று அவணங்களிலோ, நூல்களிலோ எதிலும் கச்சத் தீவு பற்றிய எந்த விவரமும் இல்லை.
இதுவரையில் கச்சத் தீவில் எங்களுக்கு உரிமை உண்டு என்பதற்கான ஆதாரங்களை இலங்கை அரசாங்கம் வெளியிடவும் இல்லை.
டச்சுக்காரர்கள், போர்சுகீசியர்கள் என்று யார் தயாரித்த இலங்கை தேசப்படங்களிலும் கச்சத்தீவு இல்லை.
17 ம் நூற்றாண்டில் பர்நோப் எனும் வரலாற்று ஆய்வாளர் இலங்கைக்கு வந்தார் அவர் இலங்கை தேசப்படம் ஒன்றை உருவாக்கினார். அதிலும் கச்சத்தீவு இல்லை.
1857 – 61 ம் ஆண்டுகளில் இலங்கை தேசப்படங்களை வெளியிட்ட ஜே.ஆரோஷ்மிக் மற்றும் டெண்னன்ட் ஆகியோரும் இலங்கை தேசப்படத்தில் கச்சத்தீவை சேர்த்து வெளியிடவில்லை.
1920 ம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது.
இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.
28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர்.
ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.
இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங்,
“ 1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவா;களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து,
கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.
1976ம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது)
கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.
1974ம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம்.
சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்கா விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.
1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன.
இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை.
தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது.
வினோபா பாவேயின் “பூமிதானம்” என எண்ணிவிட்டனர்.
இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.
*“ஒரு நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு நாடு தன்னுடைய பகுதி என்று அறிவித்தால், அதனை உரிய நாடு வலிமையாக எதிர்க்காமல் அமைதியாக இருந்தால், அது ஆக்கிரமித்த நாட்டின் உரிமையை வாய்ச் சொல்லில் சொல்லாமல் ஒப்புக் கொண்டது என்றே பொருள்” – என்பதுதான் சர்வதேசச் சட்டமாகும்.*
இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும்.
இது இந்திய ஒன்றிய அரசின் மாபெரும் தவறாகும்.
தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு!
இதை செய்தது முழுக்க #கருணாநிதியின் தமிழர் கொலை வஞ்சகத்தாலும் இன்று சோனியாவுடன் போட்ட #ஊழல் கள்ள ஒப்பந்தம் போல் அன்று இந்திராவுடன் சர்க்காரியா வழக்கை முடிக்கப் போட்ட கள்ள ஒப்பந்தம்.
© கார்த்திகேயபாண்டியன் பதிவில் இருந்து பிரதி பண்ணப்பட்டது
Tuesday, July 16, 2024
ஆறுமுக நாவலர் பதிப்புப் பட்டியல்
ஆறுமுக நாவலர் நூல்கலின் பட்டியல்
அவர் 68 நூல்களைப் பதிப்பித்து உள்ளார்.
வ. எண் | புத்தகத்தின் பெயர் | பெறப்பட்ட இடம் | முதற்பதிப்பு / மறுபதிப்பு செய்த ஆண்டு | கிடைத்துள்ள பதிப்பு ஆண்டு | பக்க எண்ணிக்கை (தட்டச்சிற்கு முன்) |
1 | சூடாமணி நிகண்டு உரை |
| 1849 |
|
|
2 | சௌந்தர்ய லகரி உரை |
| 1849 |
|
|
3 | முதல் பாலபாடம் | Panasai Murthy, Chidambaram | 1850 | 1978 / 1997 | 31 |
4 | இரண்டாம் பாலபாடம் | Panasai Murthy, Chidambaram | 1850 | 2009 | 60 |
5 | திருச்செந்தினிரோட்டயமகவந்தாதி | U.V.S. Library | 1851 | 1908 | 27 |
6 | திருமுருகாற்றுபடை உரை | Panasai Murthy, Chidambaram | 1851 | 2004 | 72 |
7 | நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை |
| 1851 |
|
|
8 | நன்னூல் சிவஞான சுவாமிகள் விருத்தி உரை |
| 1851 |
|
|
9 | ஞானக்கும்மி |
| 1852 |
|
|
10 | பெரியபுராணவசனம் | Thiru. Sachidhanandam, Chennai | 1852 |
| 378 |
11 | ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் | Panasai Murthy, Chidambaram | 1853 | 2009 | 32 |
12 | நல்வழி | Panasai Murthy, Chidambaram | 1853 | 2012 | 36 |
13 | நன்னெறி | Panasai Murthy, Chidambaram | 1853 | 2012 | 32 |
14 | வாக்குண்டாம் | Panasai Murthy, Chidambaram | 1853 | 2000 | 24 |
15 | சிவாலய தரிசன விதி | Panasai Murthy, Chidambaram | 1854 | 1978 / 2011 | 48 |
16 | சைவதூஷண பரிகாரம் | U.V.S. Library | 1854 | 1957 | 99 |
17 | முதல் சைவ வினாவிடை | Panasai Murthy, Chidambaram | 1854 | 2008 | 48 |
18 | திருக்கோவையார் மூலம் | U.V.S. Library | 1860 | 5® £v¨¦ | 428 |
19 | திருவாசகம் மூலம் |
| 1860 |
|
|
20 | அன்னப்பட்டியம் - தருக்கசங்கிரகம் உரை | Thiru. Sachidhanadham, Chennai | 1861 |
| 79 |
21 | திருக்குறள் பரிமேலழகர் உரை |
| 1861 |
|
|
22 | திருக்கோவையார் நச்சினார்கினியர் உரை |
| 1862 |
|
|
23 | கந்தபுராணம் வசனம் | Thiru. Sachidhanadham, Chennai | 1864 |
|
|
24 | பெரியபுராண சூசனம் | Thiru. Sachidhanandam, Chennai | 1864 |
| 136 |
25 | இலக்கணவினாவிடை | Panasai Murthy, Chidambaram | 1865 | 1995 | 28 |
26 | நான்காம் பாலபாடம் | Panasai Murthy, Chidambaram | 1865 | 2010 | 298 |
27 | இலக்கணகொத்து | U.V.S. Library | 1866 | 1866 | 93 |
28 | இலக்கணவிளக்கச்சூறாவளி | U.V.S. Library | 1866 | 1866 | 89 |
29 | சேதுபுராணம் | U.V.S. Library | 1866 | 1932 | 319 |
30 | திருவிளையாடற்புராணம் |
| 1866 |
|
|
31 | தொல்காப்பியர் சூத்திர விருத்தி |
| 1866 |
|
|
32 | பிரயோக விவேகம் மூலம் உரை |
| 1866 |
|
|
33 | கோயிற்புராணம் உரை |
| 1867 |
|
|
34 | கொலை மறுத்தல் |
| 1868 |
|
|
35 | சேனாவரையம் |
| 1868 |
|
|
36 | சைவ சமய நெறி உரை | Thiru. Sachidhanandam, Chennai | 1868 | இரத்தாசி வருடம் | 314 |
37 | தாயுமானவர் பாடல் |
| 1868 |
|
|
38 | திருவுந்தியார் பாடல் |
| 1868 |
|
|
39 | பாரதம் |
| 1868 |
|
|
40 | வைராக்கிய சதகம் |
| 1868 |
|
|
41 | வைராக்கிய தீபம் |
| 1868 |
|
|
42 | போலியருட்பா மறுப்பு |
| 1869 |
|
|
43 | யாழ்ப்பாண சமயநிலை |
| 1872 |
|
|
44 | இரண்டாம் சைவ வினாவிடை | Thiru. Sachidhanandam, Chennai | 1873 |
|
|
45 | இலக்கணச்சுருக்கம் | Thiru. Sachidhanandham, Chennai | 1873 |
| 218 |
46 | சிவஞான போத சிற்றுரை |
| 1873 |
|
|
47 | சிவராத்திரி புராணம் |
| 1873 |
|
|
48 | இலங்கை பூமி சாஸ்திரம் |
| 1874 |
|
|
49 | புட்பவிதி | Panasai Murthy, Chidambaram | 1874 | 1998 | 52 |
50 | குரு சிஷ்ய கிரம்ம் |
| 1875 |
|
|
51 | சிராத்த விதி |
| 1875 |
|
|
52 | சிவபூசா விதி |
| 1875 |
|
|
53 | தமிழ் அகராதி |
| 1875 |
|
|
54 | தமிழ் இங்கிலீஷ் அகராதி |
| 1875 |
|
|
55 | தமிழ் சமஸ்கிருத அகராதி |
| 1875 |
|
|
56 | தருப்பணவிதி |
| 1875 |
|
|
57 | நல்லூற் கந்தசுவாமி கோயில் - 1 |
| 1875 |
|
|
58 | நல்லூற் கந்தசுவாமி கோயில் - 2 |
| 1875 |
|
|
59 | நன்னூல் காண்டிகையுரை | Panasai Murthy, Chidambaram | 1875 | 1963 | 252 |
60 | நன்னூல் விருத்தியுரை |
| 1875 |
|
|
61 | நைடதவுரை |
| 1875 |
|
|
62 | பூஜைக்கிடம் பண்ணும் விதி |
| 1875 |
|
|
63 | போசன விதி |
| 1875 |
|
|
64 | மூன்றாம் அநுட்டான விதி |
| 1875 |
|
|
65 | நித்திய கருமவிதி | Panasai Murthy, Chidambaram | 1878 | 2001 | 20 |
66 | மூன்றாம் பாலபாடம் | Thiru. Sachidhanandham, Chennai | 1882 | 1939 | 139 |
67 | சிதம்பரமான்மியம் | Panasai Murthy, Chidambaram | 2004 | 1996 | 42 |
68 | சிவதத்துவ விவேகம் | Thiru. Sachidhanandham, Chennai |
|
|