Thursday, March 10, 2022

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிறித்தவ மேலாதிக்கம்

ஊடகத்தாருக்கு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிறித்தவ மேலாதிக்கம்
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

குடியரசுத் தலைவர் கோத்தபயா அழைத்திருக்கிறார். தமிழரின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேச வாருங்கள் என அழைத்திருக்கிறார்.

தமிழர் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார். இந்திய பிரதமர் வரு முன்பு அழைத்திருக்கிறார்.

இலங்கைத் தமிழர் தேசியப் பரப்பில் 87% சைவர். 12% கிறித்தவர். ஏனையோர் 1%.

மலையகம், கிழக்கு, வடமேற்கு, வடக்கு எனத் தமிழ்த் தேசிய பரப்பின் வாழ்விடங்கள். மரபுவழி வாழ்விடங்கள்.

கிழக்கின் சம்பந்தன் தலைமையில், வடக்கின் சேனாதிராசா அடைக்கலநாதன் சித்தார்த்தன் சுமந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்திப்பர். 

இந்த ஐவர் குழுவில் இருவர் கிறித்தவர். 
87% சைவர் சார்பில் குழுவில் 60% சைவரும் 
12% கிறித்தவர் சார்பில் குழுவில் 40% கிறித்தவரும் அடங்குவர்.

இச்சந்திப்பில் சைவரான அம்பாறைக் கலையரசன் இல்லை. மலையகச் சைவரான இராதாகிருட்டிணனும் இல்லை.

தமிழர் தேசியப் பரப்பில் விரிந்துள்ள பூதாகரமான பிரச்சினைகளுள் சைவர்களுக்குப் புத்தர்களால் முகமதியர்களால் கிருத்துவர்களால் எழுகின்ற பிரச்சினைகளே பாரிய பிரச்சினைகள்.

திருக்கேதீச்சர வளைவு உடைப்புடன் மன்னாரில் 37 இடங்களில் கத்தோலிக்கரின் இந்து சமய அழிப்பு என்பனவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்த மன்னார் ஆயரின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் குழுவில் இருக்கிறார்.

மலையகத்தில் இரு தசாப்தங்களின் முன் 100 கிருத்துவர்கள். இன்று 145 கிறிஸ்தவர்கள். வடக்கில் இரு தசாப்தங்களின் முன் 9% கிறித்தவர். இன்று 19%  கிறித்தவர். மத மாற்றிகள் அட்டூழியத்தைச் சைவர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். மதமாற்றிகள் சார்பில் குழுவில் சுமந்திரன் இருக்கிறார்.

தமிழ்தேசிய பரப்பில் புதிது புதிதாக மசூதிகள் தேவாலயங்கள் விகாரங்கள் அமைந்து வருகின்றன. புத்தர் முகமதியர் கிருத்தவர் இல்லாத இடங்களில் எல்லாம் அமைந்து வருகின்றன.

சைவர்களுக்கு தமிழ்த்தேசிய பரப்பில் நடைபெறும் அட்டூழியங்களை எடுத்துச் சொல்ல முடியாது பெருகி வருகின்றன. 

குடியரசுத் தலைவரைக் காணச் செல்லும் ஐவர் குழுவில் உள்ள 60% சைவரையும், தமிழ்த் தேசியப் பரப்பில் சைவர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்களைச் சொல்ல விடாது 40% கிறித்தவர் அடக்கி வைத்திருக்கின்றனர்.

கிறித்தவ மேலாதிக்கத்தின் உடனான அதிகாரப் பரவலாக்கத்தால் சைவர்களுக்குத் தீமையே விளையும்.

சைவர் மீதான கிறித்துவ மேலாதிக்கத்தை உறுதி செய்யத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐவர் குழுவில் 40% கிறித்தவர் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் செல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

கலையரசனையோ குகதாசனையோ இராதாகிருட்டிணனையோ சேர்த்து நால்வரும் கிறித்தவர் ஒருவரும் ஆன ஐவர் குழுவாகக் குடியரசுத் தலைவரைத் தமிழ்த் தேசியப் பரப்புச் சார்பாகச் சந்திக்கச் செல்வதையே இலங்கைச் சைவர்கள் போற்றுவார்கள்.

 

Monday, March 07, 2022

நீர்வேலி தெற்கில் மதமாற்றிகள்

 பிலவ, மாசி 2, 2053 திங்கள் (14.02.2022)

 

அனுப்புநர்

யா/268 நீர்வேலி தெற்கு நிலதாரிப் பிரிவுத் தமிழ் மக்கள்

நீர்வேலி

 

பெறுநர்

தவிசாளர், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை

புத்தூர்

வாழிடமா? வழிபாட்டிடமா?

அன்புடையீர்,

வணக்கம்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைப் பிரிவில் வாழிடக் கட்டடம் கட்ட உரிமம் பெற்றவர் அக்கட்டடத்தை வழிபாட்டுக் கட்டடமாக மாற்றமுடியாது.

வாழ்விடத்தில், வசிப்பிடத்தில் குடும்பம், இல்லம், தனி நபர் வாழ்வர். அவரது, அவர்களது தனி நம்பிக்கை சார்ந்து தனியாக வழிபடுவதும் வாழிடத்தின் பயன்களுள் ஒன்று.

கட்டடம் கட்டும் விண்ணப்பப் படிவத்தில், வாழிடம் Residential; சில்லறை வணிகம் Retail Commercial; அரச அலுவலகம் Gov. Offices; பிற அலுவலகம் Other Offices; உணவகம், தங்கு விடுதி Restaurants, Hotels; தொழிலகம் பட்டறை Industry & Workshops; களஞ்சியம் அல்லது கிடங்கு Warehouses; பிற வகை எனில் குறிக்க Other (Please Specify); என்றே விண்ணப்பிக்கிறார்கள்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைப் பிரிவில் யா/268 நிலதாரிப் பிரிவில், பட்டியாவளை வளவில் வாழிடத்துக்காக உரிமம் பெற்று வீடு கட்டி வாழ்ந்தோர் காலஞ்சென்றவர்களான கதிரவேலு மற்றும் அவர் மனைவி தனபாக்கியம் இல்லத்தவர்.

போரச் சூழல் காரணமாக கதிரவேலு மற்றும் அவர் மனைவி தனபாக்கியம் இணையரின் மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அதனால் அந்த வளவும் வீடும் வெற்றிடமாயது.

பின்னர் அவ்வீட்டில் கணவனும் மனைவியுமாக இருவர் வாடகைக்குக் குடியிருக்கின்றனர். திரு. திருமதி பெர்ணாந்து இருவருமே வாடகைக்குக் குடி வந்தனர்.

யா/268 நீர்வேலி தெற்கு நிலதாரிப் பிரிவில் சைவக் குடும்பம் 688 சைவ மக்கள் 1976. கிறித்தவக் குடும்பம் 36 கிறித்தவ மக்கள் 113.

கட்டற்ற நம்பிக்கை உரிமம் அடிப்படை உரிமை. மதச் சுதந்திரம் அடிப்படை உரிமை. அரசியலமைப்பு ஏற்ற அடிப்படை உரிமை. Religious Freedom is a fundamental right enshrined in the Sri Lankan constitution.

சைவ மக்களுக்கு யா/268 பிரிவில் சைவ வழிபாட்டிடங்கள் பல உள. கிறித்தவ மக்களுக்குக் கிறித்தவத் தேவாலயங்கள் இரண்டு அயலில் உள.

வேறு சமயத்தவர் அங்கில்லை. வேறு சமய வழிபாட்டிடங்களும் அங்கில்லை.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைப் பிரிவில் யா/268 நிலதாரிப் பிரிவில், பட்டியாவளை வளவில் வாழிடத்துக் கட்டடத்தைப் படிப்படியாக வழிபாட்டிடமாக மாற்றுவது சட்ட மீறல். வாழிடத்தை வழிபாட்டிடமாக மாற்றுவதெனில் பிரதேச சபையிடம் உரிமம் பெறவேண்டும். அவ்வாறு பெறாமலே வாழ்விடத்தை வழிபாட்டிடமாக்கினர் திரு பெர்ணாந்து இணையர்.

Mr and Mrs Fernando had not obtained necessary permissions for construction of a prayer hall and is conducting prayers without permission from local authorities.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைப் பிரிவில் யா/268 நிலதாரிப் பிரிவில் வாழும் கிறித்தவர்கள் பட்டியாவளை வளவில் திரு பெர்ணாந்து இணையரின் வாழ்விடத்துக்கு வழிபடச் செல்வதேயில்லை. ஏனெனில் அவர்களுக்கு வழமையாக வழிபடும் கிறித்தவ தேவாலயங்கள் உள.

சைவர்களை ஏமாற்றியும் மயக்கியும் பொய்யுரைத்தும் கிறித்தவர்களாக்கும் சபையே திரு பெர்ணாந்து இணையரின் அமைப்பு. அற்புத செப ஆலயம் என்ற அமைப்பு. படம் பார்க்க

A picture containing text, indoor

Description automatically generated

 

பட்டியாவளை வளவையும் வாழ்விடத்தையும் சுற்றி வாழ்பவர் சைவத் தமிழ்ப் பழங்குடியினர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நீர்வேலியில் சைவத் தமிழ்க் குடியினர் வாழ்கின்றனர். நீர்வேலி சிவசங்கர பண்டிதர் போன்ற சைவ ஆன்மிகப் பெரியார் பலறை ஈந்த, வழிவழி ஆளாய்க் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடி எம்மானுக்கே அடியவராக வாழ்கின்ற செம்மொழிச் செந்தமிழ்ச் செஞ்சாலிச் சைவ மணம் பெருக்கும் ஊர் நீர்வேலி.

அங்கே சைவச் சூழலைக் குலைக்க, சைவச் செஞ்சாலியைச் சிதைக்க, தமிழ்ப் பண்பாட்டை வேறறுக்க வந்த வாடகைக் குடியிருப்பாளரே திரு. பெர்ணாந்து இணையர்.

இத்தகைய சூழ்நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரிகளை உங்கள் கவனத்திற்கு முன்வைக்கிறேன்.

No one can be permitted to disturb the public order or to exercise immoral practice or to cause harm to health of an individual in the name of freedom of religion. Freedom of religion is provided to the persons but in persons it is only provided to individual but not to the group of individuals.

வாடகைக்கு வீட்டைப் பெற்ற திரு. பெர்ணாந்து இணையர் வழிபாட்டு நேரத்தில் ஒலிபெருக்கியை முடுக்கி அயலவருக்கு நாள்தொறும் ஒலிமாசுத் தொல்லை கொடுக்கின்றனர். உச்ச நீதிமன்றம் ஒலிமாசாக்கலைக் கண்டித்த தீர்ப்பு வரிகளையும் பார்க்க.

The custom of religious spreads using loudspeaker is not an essential element of any religion. No individual or group can be allowed to create noise pollution or disturb the peace of others in the name of religion. Right to freedom of religion and practice of religious affairs are undoubtedly fundamental rights, but the same is subject to public order, morality and health, which would not prevent state from acting in appropriate manner in the larger public interest.

பிரதேச சபையின் உரிமமின்றி, வீட்டின் முன்பக்க மதிலைத் திரு. பெர்ணாந்து இணையர் கட்டியுள்ளனர். அப்பட்டமான சட்டமீறல் அல்லவா? உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். பின்வரும் விதி உங்களுக்குத் தரும் ஆட்சிமையைத் திரு பெர்ணாந்து இணையர் மீறினர்.

Pradeshiya Sabhas Act, No. 15 of 1987 section 47 (1) says: It shall not be lawful for any person to commence any building. boundary wall, gateway or fence along any thoroughfare within the limits of any Pradeshiya Sabha or to erect any temporary fence or enclosure.

வழிபாட்டுக் கூட்டங்களுக்காக உள்ளூரவர் சேர்வதில்லை. வெளியூரவரே குவிகின்றனர். பணத்திற்கும் உணவுக்கும் உடைக்கும் மதுவுக்கும் ஆக அங்கு வருகின்றனர். சோற்றுக்காக மதம் மாறுகின்றனர். பெரும் கூட்டம் கூடுகிறது. வாழ்விடமான அக்கட்டடத்தின் கொள்ளவை மீறிய கூட்டம். அப்பட்டமான சட்டமீறல் அல்லவா? உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். பின்வரும் விதி உங்களுக்குத் தரும் ஆட்சிமையைத் திரு பெர்ணாந்து இணையர் மீறினர்.

Pradeshiya Sabhas Act, No. 15 of 1987 section 98 says: Whenever it appears to the Pradeshiya Sabha that any house is so overcrowded as to be dangerous or prejudicial to the health of the occupiers thereof, or of the neighbourhood, and the occupiers consist of more than one family, the Pradeshiya Sabha shall act to stop this overcrowding.

படங்கள் பார்க்க

2008 அக்டோபர் 16இல் இலங்கை அரசின் புத்தசாசன அமைச்சு, பிரதேசச் செயலகங்களுக்கும் பிரதேச, மாகாண சபைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையைப் பார்க்க.

பழங்கால மரபு அமைந்த சமயங்களைத் தவிர வேறு சமயத்தினர் புதிதாக வழிபாட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு முன்பு புத்தசாசன அமைச்சில் உரிமம் பெற வேண்டும் என சுற்றறிக்கைக் கூறுகிறது.

சுற்றறிக்கை, நாடாளுமன்ற தீர்மானம் அல்ல, எனவே சட்டம் ஆகாது என்ன, விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் 2016இல் தாக்கல் செய்த வழக்கில் (SCFR 92/2016), உச்சநீதிமன்றம், 2008இன் புத்தசாசன அமைச்சுச் சுற்றறிக்கை கடைப்பிடிக்க வேண்டியதே; சட்ட வரைவுக்குள் வருவதே என 2017இல் தீர்ப்பளித்தது.

இந்தச் சுற்றறிக்கை சட்ட வலு உள்ளதால் மரபுவழிச் சமயங்களான சைவமும் புத்தமும் தவிர்ந்த ஏனைய சமயங்கள் புதிதாக வழிபாட்டிடம் ஒன்றைக் கட்டுவதாயின் உள்ளூராட்சி அமைப்பின் வழியாக மாகாண சபைக்கு விண்ணப்பித்து, புத்தசாசன அமைச்சில் மாகாண சபை, உரிமம் பெற்ற பின்புதான் அவ்வழிபாட்டு இடத்தைப் புதிதாகக் கட்டலாம்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைப் பிரிவில் யா/268 நிலதாரிப் பிரிவில் பட்டியாவளை வளவில் வாடகைக் குடியிருப்பாளராகிய திரு பெர்ணாந்து இணையர், 2008இன் புத்தசாசன அமைச்சுச் சுற்றறிக்கையைக் கவனத்தில் கொள்ளாததையும் உங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம்.

எவர் ஒருவர் தம் நிலத்தையோ வாழிடத்தையோ விற்பதாயினோ வாடகைக்கோ குத்தகைக்கோ கொடுப்பதாயினோ அயலவர்களுக்கே முன்னுரிமை என்றும் அவர்கள் ஒப்புதலையும் பெறவேண்டும் எனவும் இந்த மண்ணில் செதுக்கிய இந்த மண்ணின் பராம்பரிய மக்களின் சட்டத் தொகுப்பாகிய தேச வழமைச் சட்டம் வரையறுக்கிறது. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைப் பிரிவில் யா/268 நிலதாரிப் பிரிவில் பட்டியாவளை வளவில் வாடகைக் குடியிருப்பாளராகிய திரு பெர்ணாந்து இணையர், தேச வழமைச் சட்டத்தைக் கவனத்தில் கொள்ளாததையும் உங்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டு வருகிறோம்.

1.    வாழிடத்தை வசிப்பிடத்தை வழிபாட்டுக் கூடமாக்கிய சட்ட மீறல்

2.    வாழிடத்தில் எல்லை தாண்டிய கூட்டத்தைக் கூட்டி முள்முடித் தீநுண்மிக் corona virus கால நல்வாழ்வு விதிகள், பிரதேச சபையின் வாழிட விதிகள், சட்ட மீறல்

3.    அயலவரின் நல்வாழ்வுக்கு ஊறுசெய்யும் ஒலிமாசாக்கல் சட்டமீறல்

4.    உரிமம் இன்றி (அ) தெருவோர மதிலைக் கட்டியும் (ஆ) வழிபாட்டுக்கு ஏற்ப வாழிடத்தில் செபக் கூட்டம் நடத்த கட்டட மாற்றிய சட்ட மீறல்

5.     ஆபிரகாமிய சமயத்தினர் புதிதாக வழிபாட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு முன்பு புத்தசாசன அமைச்சில் உரிமம் பெறாத சட்ட மீறல்

6.    தேச வழமைச் சட்டத்துக்கு அமைய அயலவர்களின் ஒப்புதலின்றி எவரும் வளவுகளை வீடுகளை வாங்கவோ வாடகைக்குப் பெறவோ கூடாதென்ற விதி மீறல்.

7.    இராவணன் காலத்துக்கு முன்பிருந்தே, பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மரபு வழியாக தொடர்ச்சி மாறாமல் இடையீடற்று இந்த மண்ணின் மக்கள் கைக்கொண்டுவரும் ஆன்மீக மரபு, நோய் நாடி நோய் முதல் நாடி உணவே மருந்தாகும் வாய் நாடும் உடல் நல மருத்துவ வழமை, சமூக ஒழுக்கம், நீதி அமைப்பு, பொருளாதாரக் கட்டமைப்பு, வாழ்வியல் பண்பாட்டு அமைப்பு யாவற்றையும் உடைத்தெறிந்து, பசுஞ்சோலைக்கான பண்பாட்டுக்கு மாற்றாகப் பாலைவனப் பண்பாட்டுப் பிறழச்சியை வாழ்வாக்கும் சமயம் மற்றும் வாழ்வியலை வலிந்து புகுத்தும் சட்ட மீறல்

இச் சட்டமீறல்களையும் வழமை மீறல்களையும் நிறுத்த உங்களுக்கு ஆட்சிமையை 1987ஆம் ஆண்டின் பிரதேச சபைகளுக்கான 15ஆவது சட்டம் (Pradeshiya Sabhas Act, No. 15 of 1987) தந்துள்ளது.

உரிய ஆட்சிமை நடவடிக்கை வழியாக நீர்வேலி தெற்குச் சைவத் தமிழ்ப் பராம்பரியத்தைக் காக்கப் பின்வரும் அயலவர்கள் கையொப்பமிட்டு இவ்விண்ணப்பத்தை உங்களுக்கு அனுப்புகிறோம்.

படிகளை, 1. வட மாகாண ஆளுநர், 2. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர், 3. யாழ்ப்பாணம் மாவட்டக் காவல்துறை ஆணையர், 4. வலிகாமம் கிழக்குப் பிரதேசச் செயலர் யாவருக்கும் அனுப்புகிறோம்.

நன்றி

அன்புடன்

வரிசை எண்         பெயர்         அஅ எண்   தொப்பே எண்           கையொப்பம்

கார்த்திகா கணேசருக்கு வாழ்த்துரை

 வாழ்த்துரை

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இளமைத் துடிப்போடு படிக்கிறார். பேரார்வத்தோடு படிக்கிறார். உற்சாகத்தோடு படிக்கிறார். பல நூல்களைப் படிக்கிறார். இணைய தளங்கள் பல உசாவுகிறார். தேடித் தேடித் தகவல்களைச் சேகரிக்கிறார். விளைவாக, இந்து மதத்தின் பரிணாமச் சிந்தனைகள் எனும் நூலைத் தந்துளார் கலாநிதி கார்த்திகா கணேசர்.

கலைகள் பல அறிவோரே, இலக்கிய அறிவு நிறைவோரே, மொழி அறிவுப் புலவோரே, ஆய்வுப் பார்வை உடையோரே தேர்ந்து தெளிந்த நாட்டியக் கலைஞர்.

பல்துறைகளை ஒருங்கிணைத்துத் தன்னுள் அடக்கும் அற்புதக் கலை, ஆடற் கலை. கலாநிதி கார்த்திகா தேர்ந்த ஆடற் கலைஞர்.

பல் துறைகளை ஒருங்கிணைக்கும் அதே கலை ஆற்றலை எந்த ஒரு நூலைப் படைப்பதிலும் கொண்டமை அவரது நாட்டிய ஆளுமையின் வெளிப்பாடே. அவர் எழுதித் தமிழக அரசின் பரிசு பெற்ற காலந்தோறும் நாட்டியக் கலை காலத்தைக் கடந்து வாழும் சிறந்த படைப்பு. அவ்வாறே அன்னார் எழுதிய ஏனைய நூல்களும் கனதியானவை, காத்திரமானவை, கருத்துக் களஞ்சியமானவை.

ஒளி பாய்ச்சும் பகலவன் கிழக்கில் உதிக்கிறான். அறிவொளி பாய்ச்சிப் பரப்பிய அரும் பெரும் கண்டுபிடிப்புகளை உலகிற்கு வழங்கியோரும் கிழக்கத்தியரே; அறிவாற்றல் படைத்த மேதைகள் பலரும் கிழக்கத்தியரான இந்திய துணைக் கண்டத்தினரே என அடுத்து வரும் பக்கங்களில் பறைசாற்றியுள்ளார் கலாநிதி கார்த்திகா.

இந்த ஆண்டு அவருக்குப் பவள விழா ஆண்டு. அவரது பவள விழவை ஒட்டியதே இந்நூல். தளர்வறியா அவர் கலை முயற்சிகள் எழுத்துத் திறமைகள் தொடர்வதாக.  வாழ்த்துகிறேன், வணங்குகிறேன், போற்றுகிறேன்,

அறிவுப் பகிர்வும் கலைப் பகிர்வும் கலாநிதி கார்த்திகா கணேசரின் வாழ்வாகுக. அவர் இனிய மனம்போல அவர் வாழ்வும் இனிமையாக அமையப் பவள மேனியன் பால் வெண்ணீற்றன் கூத்தப் பிரான் திருவருள் பொழிவாராக.

14.1.2022

மறவன்புலவு

சாவகச்சேரி

சிலோன் விஜயேந்திரனுக்கு அணிந்துரை

 கல்லடி வேலுப்பிள்ளை

சிலோன் விஜயேந்திரன்

அணிந்துரை

"நாளைய பிரியாணியை விட இன்றைய கஞ்சி அமிர்தம்". சிலோன் விஜயேந்திரன் என்னிடம் அடிக்கடி கூறும் அழகு வரி. நேற்று முடிந்தது. நாளை வருமா? தெரியாது. இன்று இப்பொழுது வாழ்வதே வாழ்வு. சிலோன் விஜயேந்திரனின் உயர்ந்த வாழ்வியலின் தளம். என்னிடம் எப்பொழுதும் பகிரும் தளம்.

மிகை  நடிப்பாளர் சிவாஜி கணேசன் என்பார். அவருடன் இணைந்து நடித்த படங்களின் காட்சிகளைக் கூறுவார். தமிழகத்தில் நூறுக்கும் கூடுதலான எண்ணிக்கையில் திரைப்படங்களில் நடித்தவர். இளவாலை விஜயேந்திரன் என நான் அவரை என் மாணவப் பருவத்தில் அறிவேன். சென்னை வந்ததும் மண்வாசனை மேலிடச் சிலோன் விஜயேந்திரன் என மாற்றிக் கொண்டார்.

தொல்காப்பியம் கூறும் எண் சுவைகளான, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி,  உவகை என்பன உடன் சாந்தமும் சேர, ஒன்பது சுவைகளும் சிலோன்  விஜயேந்திரனுக்கு வருவாயைத் தேடித்தேடித் தந்தன. ஒன்பது சுவைகளையும் நடிப்பால் ஒரு மணி நேரத்தில் இவர் வெளிப்படுத்தாத கல்வி நிலையங்கள் தமிழகத்தில் இல்லை எனலாம். நவரச நாயகன் சிலோன் விஜயேந்திரன் எனவே தமிழக மாணவர் உலகம் இவரை அறியும்.

மாவிட்டபுரம் பண்டிதர் க. சச்சிதானந்தனிடம் தமிழ் கற்றதை நிணைவு கூர்வார். உரை நடை, கவிதை இரண்டிலும் தனக்கெனத் தனிப் பாணி வகுத்தவர். நடைமுறை கமழ்வதே எழுத்து என்பார். இயல்பாக எழுவதே எழுத்து என்பார். இவரது தமிழால் இவரிடம் நட்புப் பேணியவர் கலைஞர் கருணாநிதி. கலைஞரின் திரை இசைப் பாடல்கள் எனத் தொகுத்துக் கலைஞரிடம் காட்டி வாழ்த்துப் பெற்றார். காந்தளகத்தில் நான் பதிப்பித்தேன்.

கல்லடி வேலுப்பிள்ளை விஜயேந்தினுக்குத் தாத்தா. தமிழகத்துக்குக் கல்லடியாரை அறிமுகிக்க ஈழத்துப் பதிப்பை என்னிடம் தந்து காந்தளகம் பதிப்பாக்கினார். தமிழகத்தின் மூத்த பதிப்பாளர் பலர் இவரின் ஆக்கங்களை வெளியிட்டனர்.இலங்கையில் இவர் பதிப்பித்த நூல்களுக்கு ஆக்கம் தந்து ஊக்குவித்தவர் என் தந்தையார் மு.கணபதிப்பிள்ளை. என்னிடம் வந்தால் என் தந்தையார் ஊக்கியதை நினைவூட்டுவார்.

திருவல்லிக்கேணியில் வாழ்ந்தார். இளமையிலிருந்தே முகமதியரின் வாழ்வியலில் ஆர்வம் கொண்டவர். திருவல்லிக்கேணிச் சூழல் அவருக்கு மிகவும் பிடித்த வாழ்வியல் சூழல். என்னிடம் அடிக்கடி கூறுவார்.

தமிழ்த் தேசியத்தில் அவர் கொண்ட கொள்கைகள் மரபணு வழியன. சைதாப்பேட்டைச் சிறையில் சில காலம் இருந்த காலங்களில் அவரிடம் செல்வேன் ஆறுதல் கூறுவேன்.

பன்முக ஆற்றலர், பண்பட்ட பழக்கத்தார், நட்புகளை நயப்பவர், ஈழத்துக்கு உலகெங்கும் பெருமை சேர்த்தவர், எனக்கு இனிய நண்பர். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன். அவரின் அன்புக்கு உரியவனானேன்.

அவரின் வழி வந்தோர் பதிப்பிக்கும் அவரின் அரிய படைப்புக்கு அணிந்துரை வழங்கி மகிழ்கிறேன்.