Saturday, June 17, 2017

சிவிகே சிவஞானம்

1974 சனவரி 7ஆம் நாள் யாழ் மாநகராட்சிக் கணக்காளர் சிவிகே சிவஞானத்துடன் பேசினேன். அக்காலம் துரையப்பா சென்னையில். ஆணையாளர் விடுப்பில். என்னுடன் கட்டுபெத்தை மாணவர் இருவர் வந்திருந்தனர். 

10.1 நிகழ்ச்சிக்குத் திறந்தவெளி அரங்கைக் கேட்டோம். தர மறுத்தவர் சிவஞானம். எங்களை முகம் கொடுத்துப் பார்க்காமல் மேசையில் உள்ள தாள்களைப் பார்த்தவாறே பேசினார். 

8.1 துரையப்பா சென்னையில் இருந்து வந்தார். 10.1 கண்காட்சியைத் திறக்க விரும்பினார். சிவஞானம் துரையப்பாவுடன் இருந்தார். 

10.1 மாலை யாழ் விடுதிவீட்டில் rest house துரையப்பாவையும் மாநகரசபைக் கணக்காளரையும் காவல்துறையினரையும் கண்டவர் நம்சிவாயத்தார். 

அவர் மாலை 0500 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் என்னைச் சந்தித்தார். தான் கண்டதைச் சொல்லி, கவனமாக இருக்குமாறு எச்சரித்தார். துரையப்பாவின் முகம். சரியில்லை. கவனம் சச்சி எனக் கூறினார். என் கூட இருந்தவர் சிவகுமாரன். 

பின்னர், இளைஞர் துரையப்பாவுடன் மோதியதைச் சிவஞானம் அறியாரா? 

1980களில் பிரேமதாசா யாழ்ப்பாணம் வந்தபொழுது, வழக்கறிஞர் இ. பாலசுப்பிரமணியம் முற்றவெளிக்குப் பிரேமதாசருடன் போனார். 
உடைந்திருந்த நினைவுச் சின்னத்தைப் பிரேமதாசருக்குக் காட்டினார். மீளக் கட்டித்தருமாறு கேட்டார். மீளக் கட்டுமாறு பிரேமதாசர் உடனே ஆணையிட்டார். பிரேமதாசரின் ஆணையை நிறைவேற்றியவர் சிவஞானமாக இருக்கலாம். மீளமைத்தவர் சிவஞானமல்ல.

என் பெயரில் இந்தப் பதிவு. நான் அஞ்சாமல் என் பெயரிலேயே எழுதுகிறேன். இலங்கைக் கட்சி என்ற மறைவில் பேசுவது யார். முகத்தை மறைப்பது ஏன்? அஞ்சுவது ஏன்? 

இலங்கைக் கட்சி என்ற மறைவில் இலங்கைக்கும் கட்சிக்கும் இடையே முன்பு சுதந்திர இப்பொழுது தமிழரசு? இனித் தமிழ் மக்கள் பேரவையிலும் சேர்பவரோ?

எடுபிடி, நப்பாசை, பொய், போக்கிலி எனச் சொல்பவர் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தவாறு மறைந்து மறைந்து ஒளிந்து ஒளிந்து கரந்து கரந்து பதுங்கிப் பதுங்கிச் சொல்கிறாரோ?

சிறீமாவோ ஆட்சியை மீறித் தமிழாராய்ச்சி மாநாட்டை 1974இல் நடத்தாமல் துரையப்பாவுக்குஎடுபிடியாக இருந்தேனா? 

1961 தொடக்கம் ஈழத்துக்காக வாழும் நான் இதுவரை ஏதாவது ஓர் அரசியல் பதவிக்கு நப்பாசை கொண்டேனா? பதவியில் இருந்துகொண்டே சுமந்திரன் வழி சிங்களத்துக்கு அடிமையானேனா?

பொது அமைப்புகள் பலவற்றில் உலகெங்கும் 25 நாடுகளில் பணியாற்றிய நான், கூட்டுறவுக் கணக்கில் பொய் சொன்னேனா? மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தேனா?

போக்கிடமின்றிக் கட்சி மாறிக்கொண்டே போக்கிலியாக இருந்தேனா? 

சென்னைச் சிறைக்கு அஞ்சி சிங்களத்திடம் மண்டியிட்டேனா? பயங்கரவாத தடைச் சட்ட வழக்குகளுக்கு அஞ்சி யாருக்காவது வால்பிடித்தேனா?

Tuesday, June 06, 2017

கால்நடை விற்பனையை ஒழுங்காக்கல்


மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இறைச்சி உண்பதற்குத் தடை. கிறித்தவ, இசுலாமியரின் உணவுப் பழக்கத்தில் தலையீடு. தாழ்த்தப்பட்டோரின் வாழ்வுமுறை சீரழிவு என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.
https://www.youtube.com/watch?v=ojKxaih6T6k.
இச் செய்திகளால் உலகெங்கும் உள்ள மக்களின் சினம் ஊடகங்களில் சமூகவலைவெளியில் போராட்டங்களில் வெளியாகின்றன. மக்களின் காலம், பொருள், சிந்தனை, செயல் செலவாகின்றன. தேவைதானா?
கள நிலை அதுவல்ல. இந்து சமயத்தில் சிலரிடை உள்ள மூடநம்பிக்கைக்கு ஆப்பு வைக்கும் சட்டமே அச்சட்டமோ? தேடினேன், திரண்டதைத் தருகிறேன்.
நேபாளத் தலைநகர் காத்மண்டு. தெற்கே பரா மாவட்டத்தின் பறையர்ப்பூர். சனகரின் மிதிலைக்கு மேற்கே, இந்திய நேபாள எல்லைக் கோட்டுக்கு அண்மித்த ஊர். இந்திய விகாரை மாநில எல்லையில் கோரக்பூர், முசராப்பூர், பாடலிபுரம் யாவும் பறையர்ப்பூரின் அருகே.
பறையர்ப்பூரில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்து சமயத் திருவிழா. காதிமை அம்மன் திருவிழா. 2009இல் நடந்த விழா. 2014இல் அடுத்த விழா. நடக்கப்போவது 2019இல்.
தீமை அகலும். நன்மை பெருகும். ஆற்றலின் அணங்கு காதிமை. அவளே அருள் பெருக்குபவள். விழாவின் நோக்கமே தீமை அகற்றலும் ஆற்றல் பெருக்கலும்.
இதற்காகக் காதிமைக்குக் கொடுப்பது உயிர்ப் பலி. மூன்று தொடக்கம் ஐந்து இலட்சம் வரை எண்ணிக்கையான எருமைகளை உயிர்ப் பலியாகக் கொடுப்பர் நேபாள இந்துக்கள்.
இந்திய எல்லைக் கோட்டுக்கு அண்மித்த ஊர். எனவே விகார மாநில இந்துக்கள் விழாவுக்குப் படையெடுப்பர். கடவுச் சீட்டும் நுழைவுரிமமும் இல்லாமலே இந்திய நேபாள எல்லையை இரு நாட்டாரும் கடக்கலாம்.
நேபாளம் குறிஞ்சி நிலம். மலைகள், குன்றுகள் பள்ளத் தாக்குகள் பரவிய நாடு. அங்கு எருமைகள் அருமை. தெற்குச் சமவெளியில் சில ஆயிரம் எருமைகளே உள.
இந்திய விகாரை மாநிலம் ஆற்றுப் படுகையான சமவெளி, மருத நிலம். நெல் வயல்கள், கால் நடைகள் நிறைந்த மாநிலம். எருமைகளின் வாழ்விடம். நீர்நிலைகளும சேற்று நிலமும் எருமைகளுக்கு உவந்த சூழல். கோடிக்கணக்கான எண்ணிக்கையில் எருமைகள் இந்திய விகாரை மாநிலத்தில் உள.
நேபாளத்தின் பறையர்ப்பூர் காதிமை அம்மன் விழாவில் உயிர்ப் பலியாகும் எருமைகளுள், மூன்று தொடக்கம் ஐந்து இலட்சம் வரை எண்ணிக்கையான எருமைகளுள் சில ஆயிரங்களே நேபாள எருமைகள் எஞ்சியன இந்திய விகாரை மாநில எருமைகள். அநுமதி இன்றி நேபாளத்துள் கடத்தும் எருமைகள்.
2014இல் கவிரி மவுலேக்கி இந்திய அரசின் மீது வழக்குத் (வழக்கு எண் 881 / 2014) தொடர்ந்தார். (Gauri Maulekhi Versus Union Of India P. (C) No. 881 / 2014) நேபாளத்துக்குக் கடத்தும் எருமைகளால் இந்தியக் கால்நடைச் செல்வம் அழிவதைத் தடுக்கக் கோரினார்.
2015 யூலை 13இல் இந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் கருத்துக்  கூறியது. இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது. உயிர்ப் பலிக்காக நேபாளத்துக்கு எருமைகள் கடத்துவதைத் தடுக்க இந்திய அரசு விதிமுறைகளை உருவாக்குமாறு ஆணையாகப் பரிந்துரைத்தது. இந்திய விலங்கு வதைத் தடைச் சட்டம் 38(1)க்குள் அமையுமாறு விதிகளை உருவாக்குமாறு இந்திய அரசுக்கு ஆணையாகப் பரிந்துரைத்தது. (Hon’ble Supreme Court had directed on 13/07/2015 to frame guidelines to prevent animals from beings smuggled out of India to Nepal where large scale animal sacrifice took place. Hon’ble Supreme Court had also directed the Central Government to draft and notify Rules regarding to live stock market and direction was given to frame such rules under Section 38 (1) of the Prevention of Cruelty to Animals Act 1960.)
இந்திய உச்சமன்ற ஆணைக்கமைய, 2017 சனவரி 16இல் இந்திய அரசு மாதிரி வரைவை எடுத்துக் கூறுயது. பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கு 30 நாள்கள் கால எல்லை கொடுத்து முன்வைத்தது. இந்திய மக்களின்  
2017இன் கால்நடைச் சந்தையை ஒழுங்காக்கல் விதியின் பின்னணி இதுவே. அந்த விதிகளையும் தெரிந்து கொள்வது பொருத்தமானதால் கீழே தருகிறேன்.
2017இன் விலங்கு வதைத் தடை (கால்நடைச் சந்தையை ஒழுங்காக்கல்) விதிகள். 1960இல் விலங்கு வதைத் தடைச் சட்டத்தின் பிரிவு 38(1)க்குள் அமையும் விதிகள். i. The rules are called “Prevention of Cruelty to Animals (Regulation of Livestock Markets) Rules, 2017 which are made under Section 38(1) of the Prevention of Cruelty to Animals Act 1960.
இறைச்சிக்காகவோ, உயிர்ப்பலிக்காகவோ கால்நடைகளைச் (பசு, எருமை, எருது, ஒட்டகம்) சந்தைக்குக் கொண்டுவரலாகாது. அந்த மாநிலத்துக்கு சேராத ஒருவருக்கு முன்உரிமமின்றிக் கால்நடைகளை விற்கக் கூடாது. விற்றதற்கான சான்று விற்றவர், வாங்கியவர், வட்ட ஆட்சியர், கால்நடை முதன்மை அலுவலர், விலங்குச் சந்தைக் குழு ஆகியோரிடம் கொடுக்கவேண்டும். ,ii. Cattle (Cow, Buffalo, Bull, Camel) cannot be brought to Animal Market for sale for slaughter or sacrifice. Cattle cannot be sold to a person outside the state without permission as per the state cattle prevention laws. When the cattle is sold proof of sale shall be given to purchaser, seller, Tehsil Office, Chief Veterinary Officer and to the Animal Market Committee.
கால்நடைச் சந்தைகள் அனைத்தும் மாவட்ட விலங்குச் சந்தைக் குழுவிடம் அடுத்த மூன்று மாதத்துள் பதிக. போதுமான ஒளி, நீர், தீவனப் பரப்பு, மருத்துவ வசதி, கழிப்பறைகள், இறந்த கால்நடைகளை முறையாகப் புதைக்குமிடம் இருப்பதை விலங்குச் சந்தைக் குழு உறுதிசெய்க. iii. All existing Animal Markets will have to be registered within 3 months with the District Animal Monitoring Committee. The Committee shall ensure that Animal Market has adequate lighting, water, feeding area, Veterinary facility, toilets, provisions for disposal of dead animals etc.
கொம்புகளுக்கு வண்ணம் பூசுதல், எருமைகளின் காது வெட்டல், கற்றரையில் கால்நடைகளைப் படுக்கவிடல், உடலில் வேதிப் பொருள்களை விடல், இயல்புக்கு மாறான செயல்களைக் கால்நடைகள் செய வலிதல், மூக்கு வெட்டல் துளைத்தல், காது துளைத்தல், கத்தியால் அல்லது சூடான இரும்பால் குறியிடச் சுடல் யாவுக்கும் தடை. iv. Cruel and harmful practices on animals including painting of horns, ear cutting in Buffaloes, making animals lay on hard ground, use of chemicals on body of animals, forcing animals to perform unnatural acts, nose cutting, ear slitting or cutting by knife or hot iron marking on animals for identification purposes etc. are prohibited.
வாங்கிய எவரும் இறைச்சிக்கோ உயிர்ப் பலிக்கோ விற்கத் தடை. v. Purchaser of cattle cannot sell animal for slaughter or sacrifice.
கால்நடைகளின் நலம் சோதிக்கக் கால்நடைமருத்துவர் ஒருவரைப் பதவியமர்த்தல். vi. Appointment of a Veterinary Officer to check the health of the animals.
தகுதியற்ற நோயான கன்றுத்தாச்சியான கால்நடைகளை விற்கத் தடை. vii. Prohibition of sale of unfit, ill and pregnant animals.