ஐப்பசி 26 புதன் (13 11 2025)
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
எழுதுகிறேன்
திரு க. வைத்தியநாதன் அவர்கள்
ஆசிரியர், தினமணி, சென்னை
வணக்கம்.
இன்றைய காலை உங்கள் ஆசிரியத் தலையங்கம் படித்தேன்.
அறிவியல் சார்ந்த கொள்கை.
தமிழ் சார்ந்த கொள்கை.
சைவம் சார்ந்த கொள்கை.
வினைப் பயன் சொல்லும் கொள்கை.
12 திருமுறைகளிலும் 14 திருநெறிகளிலும் வினைப் பயன் சார்ந்த கொள்கையை பல்வேறு நிலைகளில் விளக்கி இருக்கிறார்கள். பகுத்தறிவு சார்ந்த கொள்கையாக விளக்கி இருக்கிறார்கள்.
இன்றைய தலையங்கம் அதற்குச் சான்று.
அரசியல் சமூகம் சார்ந்து எழுதுவீர்கள்.
அறிவியல் சார்ந்தும் எழுதினீர்கள். வாழ்க.
மரபணு எனப் பரவலாக நாம் அழைக்கும் இரட்டைப் பாம்பு வடிவத்தையும் இணைப்புச் சலாகைகளையும் 69 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் தளத்தில் அரங்கேற்றியவர்கள் நால்வர். அவர்களுள் ஒருவர் வாட்சன்.
கலிபோனியா (சண்டியாகோ) பல்கலைக்கழகத்தில் என் பேராசிரியர் இரால்ப் உலூயினுடன் வாட்சனின் அறைக்கு நான் சென்றிருகிறேன்.
மறவன்புலவில் மரபணு வடிவத்தை எட்டடி உயரத்தில் அமைப்பித்தேன். கல்வெட்டாக வாட்சனின் பெயரையும் வைத்திருக்கிறேன்.
திருவருட்பயனில் வினைப் பயனை உமாபதி சிவாச்சாரியார் சொல்லியிருக்கிறார். மரபணுக்கள் வினைப் பயன் தாங்கிகள், கடத்திகள் என நான் கருதுகிறேன்.
நன்றி
No comments:
Post a Comment