ஊடகத்தாருக்கு
புரட்டாதி 23 வியாழன் (09.10.2025)
சிவ சேனை
பாலசிங்கம் செயமாறன்
எழுதுகிறேன்
*பொய்யர்தம் மெய்யான சர்வ மதப் பேரவை*
உயிர்த்தெழுந்த இயேசு தன் 11 மாணவர்களிடமும் சொன்னார். கல் மலைக்குச் வருக.
அங்கே வந்த 11வரிடம் இயேசு சொல்கிறார்.
"... விண்ணின் அனைத்து வலிமைகளையும் இறைவன் எனக்குத் தந்தார்.
மண்ணின் அனைத்து வலிமைகளையும் இறைவன் எனக்குத் தந்தார்.
தந்தை சொன்னதைச் சொல்கிறேன்.
மகனாகிய நான் சொல்கிறேன்.
தூய ஆவியின் கருத்தைச் சொல்கிறேன்.
உலகெங்கும் செல்க.
உலக மக்களிடம் என் செய்தி சொல்க.
உலக மக்கள் என் செய்தி வழி நடப்பார்களாக.
அதற்காக அவர்களைக் கிறித்துவத்தில் இணைக்க.
அவர்களுக்கு ஞான நீராட்டுக.
நான் உங்களுக்குக் கூறியதை அவர்கள் பின்பற்ற வழி காட்டுக.
இந்தப் பணியில் நான் எப்பொழுதும் உங்களுடனேயே இருப்பேன்.
ஊழிக் காலம் வரை உங்களுடனேயே இருப்பேன்."
இயேசு உயிர்த்தெழுந்ததை விவிலியம் கூறும். மத்தேயுகாதை 28 16-20 வரிகள் மேல் உள்ளவாறு.
யோவானின் காதையும் 20:19-23; கூறும். உலுக்கரின் காதையும் 24:36-49; கூறும். மார்க்கரின் காதையும் 16:14-18 கூறும். சமய தூதர் காதையும் 1:6-8 கூறும். மத்தேயுவே மிகத் தெளிவான வழிகாட்டலைக் கொடுத்தார்.
உலகில் மக்கள் அனைவரையும் கிறித்தவராக்குங்கள். ஞான நீராட்டுங்கள் எனத் தெளிவான வழிகாட்டல் விவிலியம் கூறியதே.
இந்த வழிகாட்டல் சமய நல்லிணக்கத்திற்கு முற்றிலும் மாறானது, எதிரானது.
அவரவர் நம்பிக்கைகளை அவரவர் பின்பற்றட்டும். நமது நம்பிக்கையை நாம் பின்பற்றுவோம் என்ற கொள்கை கிறித்துவத்தில் இல்லை.
உலகில் அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும் என்ற கொள்கையே விவிலியத்தின் வழிகாட்டல். கிறித்தவர் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழப் புதைந்த கருத்து.
கிறித்தவரின் ஒவ்வொரு செயலும் இந்த வழிகாட்டலை அடித்தளமாகக் கொண்டதே. மத நல்லிணக்கத்தை அவர்கள் கோருவதில்லை
மற்றவர்கள் நம்பிக்கைகள் மோசமானவை. மற்றவர்கள் வழிபடும் கோயில்கள் சாத்தானின் வதிவிடங்கள். மற்றவர்கள் கிறித்தவர்களாகும் வரை சாத்தான் என்ற பிசாசின் பிடியில் இருப்பவர்கள். இவ்வாறான கொடுமையான கருத்தைக் கொண்டவரே கிறித்தவர்கள்.
சர்வ மதப் பேரவையில் கிறித்தவர்கள் நுழைகிறார்கள் எனில், அங்கே வருவோரைக் கிறித்தவர்கள் ஆக்குவது எப்படி? என்ற வழிகளை ஆராய்ந்தே நுழைகிறார்கள்.
ஒவ்வொரு கிறித்தவனுக்கும் சர்வ மதப் பேரவை, கிறித்தவ மயமாக்கத்தின் நுழைவாயில். கிறித்தவ மயமாக்க வேண்டும் என்ற நோக்கோடு நுழைபவனை மத நல்லிணக்க வாதியாக மாற்ற முடியுமா?
எனவே சொல்கிறேன், சர்வமும் கிடையாது மதமும் கிடையாது பேரவையும் கிடையாது. சர்வ மதப் பேரவைக் கூட்டம் என்றாலே, செப செய்தியாளரின் கூட்டம் என்றாகிவிடும்.
1999 நவம்பர் 8ஆம் நாள். இந்தியாவில் பாப்பாண்டவர். அனைத்து சமய நல்லிணக்க கூட்டத்தில் உரையாற்றுகிறார். கிறித்தவ மயமாக்குவது எங்கள் பிறப்புரிமை.
இந்தியாவில் சொல்கிறார். இந்துக்கள் நடுவே சொல்கிறார். சீக்கியர் நடுவே சொல்கிறார். யூதர் நடுவே சொல்கிறார். முகமதியர் நடுவே சொல்கிறார். புத்தர் நடுவே சொல்கிறார். சமணர் நடுவே சொல்கிறார். அனைவரும் அந்த மேடையில் இருக்கிறார்கள்.
வலிந்தோ, உற்சாகமூட்டியோ, பரிசுகள் கொடுத்தோ, எவரையும் மதம் மாற்றுவதை கிறித்தவராக்குவதை நாங்கள் ஏற்கோம். தலை இலாமாவின் சார்பாளர் மேடையில் சொல்கிறார். சொல்லிய பின்பு கூட்டத்தை விட்டு வெளியேறுகிறார்.
தலை இலாமாவின் சார்பாளரின் துணிச்சலே சைவர்களின் வாழ்வு. கிறித்தவர்களோடு மத நல்லிணக்கம் பேச மாட்டோம் என்ற உறுதியே சைவர்கள் வாழ்வு. சைவர்களைக் கிறித்தவமயமாக்கும் விவிலிய வரிகளை நீக்கிய விவிலியத்தைக் கைக்கொள்க எனக் கிறித்தவர்களைக் கேட்பதே சைவர்களின் வாழ்வு.
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பாப்பாண்டவரின் செய்தி என்ன தெரியுமா? இருபத்தோராம் நூற்றாண்டு ஆசியாவைக் கிறித்தவமாக்கும் நூற்றாண்டு என்பதே.
1999 நவம்பர் 8ஆம் நாள் தில்லியில் பாப்பாண்டவர் பேசுகிறார் "Just as the first millennium saw the cross firmly planted in the soil of Europe, and the second in that of America and Africa, so may the third Christian millennium witness a great harvest of faith on this vast and vital continent," he told a crowd in a New Delhi sports stadium.
சைவர்களே இந்தப் பின்னணியில் கிறித்தவர்களைப் பாருங்கள். சைவர்களைக் கிறித்தவர்களாக்கச் சர்வ மதப் பேரவைக்குள் நுழைந்துள்ளார்கள்.
சைவ உள்ளங்களே நல்லோர் உள்ளங்களே நலிந்து போன சைவ சமயத்தை வலிந்த நிலைக்கு மாற்ற விரும்புகின்ற சைவ சமயப் பெருமக்களே, சைவர்களைக் கிறித்தவ மயமாக்கும் மாயைக்குள் அகப்படாதீர்கள்.
சமய நல்லிணக்கத்துக்கு ஒரு பொழுதும் உடன்படாத கிறித்தவரோடு சர்வ மதப் பேரவையில் இருப்பதால் நீங்களும் கிறித்தவராக கூடிய வாய்ப்பே கூடுதல்.
No comments:
Post a Comment