புரட்டாதி 21, செவ்வாய் (07.10.2025)
அனைத்துச் சமயப் பேரவை
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
....சமயவாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக அரற்றி மலைந்தனர்... 1200 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் கூறினார்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வடமொழியில் நாடகம் எழுதியவன் மகேந்திரவர்மன் என்ற பல்லவ அரசன். அந்த நாடக வரிகளை இப்பொழுதும் படிக்கலாம். மத்த விலாச பிரகசனம் என்ற நாடகத்தில் அக்காலத்தில் வாழ்ந்த சமய வாதிகளைப் பல்லவன் மகேந்திரவர்மன் நகைச்சுவையுடன் கூறுவான்.
1800 ஆண்டுகளுக்கு முன்பு மணிமேகலையில் சீத்தலைச் சாத்தனார் சமயக் கணக்கர் காதையை வஞ்சிக் காண்டத்தில் எழுதினார். இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் இலக்கியப் பரப்பில் சைவ சமயத்தவரைக் குறித்த பதிவின் தொடக்கம் அஃதே. அக்காலத்தில் வாழ்ந்த சமய வாதிகளைச் சாத்தனார் குறிப்பிடுவார்.
காலம் காலமாகத் தமிழர், சைவ சமயத்தையே முதன்மைச் சமயக் கொண்டனர். சிவனியல் மாலியல் இவை இரண்டுமே தமிழரின் நெறிகள். வேறு நெறிகள் தமிழருக்குக் கிடையவே கிடையாது.
இயற்கை வழிபாட்டையே தமிழர் சமயமாகக் கொண்டனர். தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் கூறும் வரலாறு அஃதே. ஐந்து வகை நிலங்களில் ஐந்து தெய்வங்கள். சைவ சமயம் சார்ந்த தெய்வங்கள். வேறு தெய்வங்கள் தமிழருக்கு உண்டா? கிடையவே கிடையாது.
எனினும் காலத்துக்குக் காலம் தனிமனிதரின் கருத்துக் கோவைகள் சமயக் கருத்துகளாக, பிற தேசங்களில் இருந்து நுழைந்தன. அவற்றுள் சிறந்த, பயனுள்ள, வாழ்வியலை மேம்படுத்தும் கருத்துக்களை, சைவ சமயத்துள் தமிழர் உள் வாங்கினர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், புரட்டாதி 16, ஞாயிறு அன்று, திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் அனைத்துச் சமயப் பேரவை கூட்டத்தில் சொல்கிறார். மதம் என்று சொல் வேண்டாம். சமயம் என்று சொல் வேண்டும்.
மதம் என்று சொல்லில் திமிர் இருக்கிறது. ஆணவம் இருக்கிறது. வெறுப்பைக் கக்கும் உணர்வு இருக்கிறது. சமயம் என்று சொல்லின் மறு பொருள் காலம்.
திணிப்பது மதம். கைக் கொள்வது சமயம்.
மாந்தையிலும் அநுராதபுரத்திலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீகக் கிறித்தவர் வந்து போன சிலுவை அடையாளங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தொல்லியலார் கூறுவர்.
எனினும் தமிழரிடையே வலிந்து துப்பாக்கி முனையில் திணித்த மதமே கிறித்தவம். அதன் பின்னர் உணவுக்காக உடைக்காக உறைவிடத்துக்காகத் தங்கள் சுயத்தை விற்று மதம் மாறியவர்களே சோற்றுக் கிறித்தவர்.
எனவேயே சர்வ மதப் பேரவை. திணித்தவர்கள் மதங்களின் பெயரால் அழைக்கும் பேரவை. சர்வமும் கிடையாது. மதமும் கிடையாது. பேரவையும் கிடையாது. தாம் ஆட்ட ஆடும் பொம்மைகளைத் தேர்ந்து உறுப்பினராக்கிய பேரவை.
சர்வ மதப் பேரவையின் கூட்டம், மற்றொரு செப செய்திக் கூட்டம்.
அனைத்துச் சமய பேரவை எனில் அங்கே சமயக் கணக்கர் கூடியிருப்பர். மத வெறியர் வந்திரார். சமயக் கணக்கருக்கு மாற்றாகச் சமயப் பரப்புரைஞர் அமையும் பேரவையே சர்வ மதப் பேரவை.
சர்வ மதப் பேரவை அழைத்து வந்திருந்தோர் தொகையில் 60% அருள் தந்தைகளும் அருள் நங்கைகளுமே. நாக விகாரையின் புத்த பிக்குகளைத் தவிர வேறு புத்தர்கள் வரவில்லை. இமாம்களோடு, அவர்கள் பாதுகாப்புக் கருதி வந்த சில முகமதியர் அவையில் இருந்தனர்.
ஆகா.. ஆகா.. சமயக் கணக்கர் பேரவை அல்லவா கூடியிருக்கிறது. சமயங்களிடையே நல்லிணக்கம் காணும் முயற்சி அல்லவா நடக்கிறது. இவ்வாறு ஏமாந்த சைவப் பெருமக்கள் சிலர் அங்கு வந்திருந்தனர். சமய நல்லிணக்கத்துக்கு ஊறாக அமைந்த நிகழ்ச்சிகளை வரிசையாகக் கூற முயன்றனர்.
திருக்கேதீச்சர வளைவை உடைத்தது போல் வேறு என்னென்ன உடைக்கலாம்? கிறித்துவத்தை மேலாட்சி மதமாக மாற்றலாம்? என்ற கண்ணோட்டத்துடன் சர்வ மதப் பேரவைக்கு வந்திருந்தோர் எண்ணிக்கையே கூடுதல்.
அடுத்த நிகழ்ச்சி செம்மணியில் புதைகுழி தொடர்பான நிகழ்ச்சி. சர்வ மதப் பேரவையின் ஊடாகச் செம்மணிச் சிவன் கோயிலைக் கைப்பற்றும் முயற்சி.
செம்மணிப் புதை குழி தொடர்பான போராட்டங்களை நடத்துவதற்கு பல அமைப்புகள் இருக்கின்றன. சர்வ மதப் பேரவை நுழைவதன் நோக்கமே செம்மணிச் சிவன் கோயிலைக் கிருத்துவமயமாக்குவது.
ஒரே கல்லில் மற்றொரு மாங்காய் அடிக்கிறார்கள். சர்வ மதப் பேரவை நடத்தினாலும் அந்த நிகழ்ச்சிக்கு புத்த பிக்கு வர மாட்டார். அவரையும் சைவர் களையும் சிண்டு முடிக்கின்ற முயற்சியில் கிருத்துவத்தார் ஈடுபடுகிறார்கள்.
செம்மணிச் சிவன் கோயிலுக்காக அரசு ஒதுக்கிய நிலத்தைச் சுற்றி, அரசு தந்த வரைபடத்திற்கு அமைய முள்வேலி அமைக்க வேண்டிய கட்டாயத்துக்குச் சைவர்களைத் தள்ளுகின்றார்கள் சர்வ மதப் பேரவையினர்.
சீத்தலைச் சாத்தனாரை, மகேந்திரவர்மனை, மாணிக்கவாசகரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை, சைவர்கள் மனத்தில் இருத்துவார்களாக.
No comments:
Post a Comment