Friday, January 02, 2026

வடக்கின் வளர்ச்சியை முடக்க முயற்சி

 ஆவணி 19 வியாழன் (4 9 2025)


ஊடகத்தாருக்கு 


 *வடக்கின் வளர்ச்சியை முடக்க முயற்சி* 

பாலசிங்கம் செயமாறன் 

சிவ சேனை


கச்சதீவைச் சுற்றுலா மையம் ஆக்காதே 

மாற்று ஆற்றல் காற்றாலை நிறுவாதே

மாற்று ஆற்றல் சூரிய ஒளி நிறுவாதே

கனிம வளத்தை எடுக்காதே 

அரசு சார்பற்ற நிறுவனங்களுக்குக் கோடி கோடியாய்க் கொட்டி பொதுமக்களை விலைக்கு வாங்கித் தேவையற்ற போராட்டங்களை முன்னெடு.

போராடிப் பெற்ற மாகாண ஆட்சிப் பரவலை நடுவன் அரசுக்குத் தாரை வார்.

பொதுமக்கள் முதலீட்டில் வளர்ச்சியில் ஈடுபடாமல் கடையடைப்புகளை நடத்து. 

போருக்குப் பிந்தைய வடக்கில் ஊருக்கு ஊர் சென்று காதல் வலை விரி, மதம் மாற்று.


அத்தனையும் எங்கிருந்தோ வரும் பணத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள். வடக்கின் வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள். 


நேற்று யாழ்ப்பாணம் ஆயர் பேசுகிறார். முந்தையநாள் மன்னார் ஆயர் பேசுகிறார்.

அதற்கு முதல் நாள் ஆபிரகாம்கள் பேசுகிறார்கள்.


அனைவருக்கும் ஒரே இலக்கு. வடக்கின் வளர்ச்சியை முடக்க வேண்டும். வடக்கின் மக்களைப் பொருண்மிய மலடாக்க வேண்டும். வடக்கின் மக்களை அரசியல் குருடராக்க வேண்டும்.


தெற்கே வெந்தோட்டை சுற்றுலா மையமாகி அமெரிக்க வெள்ளிகளைக் குவிக்கலாம். வடக்கே நெடுந்தீவும் அனல தீவும் கச்ச தீவும் வானம் பார்த்த நிலங்களாக வற்றிய பொருளாதாரத்தில் தாழலாம். 


வடக்கே சுற்றுலாப் பயணிகள் வரவே கூடாது இதுவே யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் இறை உணர்வுக் கொள்கை.


பல்லாயிரம் ஆண்டு பழமையான நிலம் கச்ச தீவு. நாவின் அறு சுவைக்குள் ஒரு சுவையைத் தாங்கிய இடப் பெயர். அருமையான தமிழ்ப் பெயர். பரங்கிப் பெயர் அன்று. சராசரியாக 9 மீட்டர் ஆழமுள்ள வடகடலில், பாக்குத்ஹ தொடுவாயில் 16 மீட்டர் ஆழமுள்ள சிங்க இறால் பொந்துகளைக் கொண்ட கடலோரம் கச்சதீவு.


நாகர்கள் சிவன் கோயில் அமைத்து வழிபட்ட திருத் தீவு கச்ச தீவு. பரதவர்கள் காளி கோயில் அமைத்து வழிபட்ட கச்ச தீவு. காளியாத்தா தந்த கடல் வாழ்வு என வாழ்ந்த தமிழரின் தீவு கச்ச தீவு.


யாழ்ப்பாணம் மறை மாவட்ட பயன்படுத்தும் தீவாம்? ஆயர் பொய்களை அவிழ்த்து விடுகிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பு அங்கே எந்தக் கிறித்தவக் கோயிலும் இல்லவே இல்லை.


மலையாளக் குஞ்சலி வீரர்கள் சங்கிலியனுக்கு ஆதரவாக வந்தனர். பரங்கிப் போர்த்துக்கேயக் கத்தோலிக்கன் இடீ லிவராவின் கடற்படையை ஓடோட விரட்டிய தீவு கச்ச தீவு. சங்கிலியனின் போர் வீழ்ச்சிக்குப் பின் கச்ச தீவின் காளியாத்தா கோயிலையும் சிவன் கோயிலையும் இடிப்பித்தவன் பரங்கிப் போர்த்துக்கேய கத்தோலிக்கன் இடீ லிவரா.


கச்சதீவில் கோயிலை இடிக்கும் முன்பே கருவறையில் உள்ள மூலவர்களான காளியாத்தாவையும் எட்டுப் படை இலிங்கச் சிவனையும் அப்படியே பெயர்த்து எடுத்துப் படகில் நெடுந்தீவுக்கு கொண்டு வந்து காத்து வருபவர்கள் நெடுந்தீவின் மூத்த முதலிக் குடும்பங்கள்.


கச்ச தீவில் சைவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பரங்கிகளின் எச்சங்கள் பறித்தெடுக்க முயல்கிறார்கள். நூறாண்டுகளே பழமையான சிறிய அந்தோனியார் தேவாலயத்துக்காக கச்ச தீவு முழுவதும் சுற்றுலா மையமாகக்கூடாது என்று கொக்கரிப்போர் போர்த்துக்கேயர் கத்தோலிக்க ஆக்கிரமிப்பாளரின் எச்சங்கள்.


இலங்கை முழுவதும் மாற்று ஆற்றல் காற்றாலை நிலையங்கள் பற்பல. இலங்கையை வளமாக்கும் நிலையங்கள். மன்னாருக்கு வரக்கூடாதாம். மன்னார் ஆயர் முடக்குகிறார் வடக்கின் வளர்ச்சியை.


கடற்கரைகள் வனக் காப்பகங்கள், தொல்லியல் பேணு களங்கள், யாவும் சுற்றுலா மையங்கள். அமெரிக்க வெள்ளிகளை அள்ளிக் குவிக்கும் சுற்றுலா மையங்கள். கச்ச தீவின் கடற்கரையும் சுற்றியுள்ள தெளிந்த கண்ணாடி போன்ற நீரும் சுழியோடிகளின் சொர்க்கம். கச்ச தீவு சுற்றுலா மையமானால் வடக்கு வடங் கொளிக்கும். 


தீவுகளெங்கும் புதிய படகுத் துறைகள். அங்கே நாரிழை வள்ளங்கள், உல்லாசப் படகுகள். ஏழாற்றுப் பிரிவு தொடக்கம் கச்ச தீவு வரை அமெரிக்க வெள்ளிகள் புழங்கும்.


கச்ச தீவுச் சிவன் கோயிலை உடைத்த தளபதி இடி லிவேராவின் எச்சங்கள் கச்ச தீவின் எதிர்காலத்தை உடைப்பதற்கு அறிக்கை விட்டிருக்கிறார்கள். அரசு அந்த அறிக்கையைக் கவனத்தில் கொள்ளவேண்டா.


8% கத்தோலிக்கருக்காக 80% சைவத் தமிழரின் வளமான எதிர்காலத்தை அடகு வைக்க முடியாது. கச்சத்தீவு யாழ்ப்பாண மறை மாவட்டத்திற்கு உரியதன்று. சைவத் தமிழ் மக்களின் சொத்து.


கச்சதீவைச் சுற்றுலா மையமாக்குக. யாழ்ப்பாணச் சைவத் தமிழ் மக்களின் பொருண்மிய வளத்தைப் பெருக்குக. புதிய முதலீடுகளை ஈர்க்க. புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துக. புதிய வாழ்வியலை நோக்கியே சைவத் தமிழ் மக்கள் வளர விரும்புகிறோம். மேதகு குடியரசுத் தலைவர் அநுராவின அரசே உதவுக

No comments: