Saturday, March 21, 2026

திருகோணமலையில் புத்தர் சிலை

 திருகோணமலை

16.11.2025 புத்தர் சிலையைக் காவல்துறையினர் அகற்றினர்.
17.11.2025 காவல்துறையினரே அதே புத்தர் சிலையை அங்கு மீளவும் அமைத்தனர்

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமைக் குரு  தவத்திரு கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர்.

தவத்திரு தேரர் இலங்கை குடியரசுத் தலைவருக்கு 16.11.2025 அன்று கடிதம் எழுதுகிறார்.

திருகோணமலை சம்புத்த செயந்தி போதிராச விகாரை. இலங்கை அமரபுர மகா நிக்காயவின் சொத்து. 1951ஆம் ஆண்டிலேயே அங்கே அமரபுர நிக்காயத்தாரின் பங்களிப்பு. புத்த சாசன அமைப்பு, அகில இலங்கைப் புத்த காங்கிரசு என அனைத்துத் தரப் புத்தரின் ஆதரவையும் பெற்ற புத்த பல்சாலை நிலையம்.

2014ஆம் ஆண்டில், அப்போதைய குடியரசுத் தலைவர் வழங்கிய மானியம் அல்லது நிவந்தம். சொத்துப் பதிவுக்கான ஆவணங்கள், 2014 இல் குடியரசுத் தலைவர் வழங்கிய நிவந்த ஆவணங்கள் என முறையாக அமரபுர நிக்காயாவிடம் ஆவணங்கள் உள்ளன.

புத்த பல்சாலைக்கு அருகே உரிமம் இன்றிதீ தனியார் கட்டடம். நீதிமன்றத்தின் கட்டடத்தை இடிக்க ஆணைகள். இடிக்க வேண்டாம் என்ற ஆணைகள். பல்வேறு மட்ட நீதிமன்றங்களின் தீர்ப்புகள்.

அத் தீர்ப்புகள் புத்த பல்சாலைக்குரிய உரியன அல்ல. புத்த பல் சாலையில் புத்தர் சிலையை வைக்கலாமா வைக்கக் கூடாதா என்பது முழுக்க முழுக்க அதன் உரிமையாளராகிய அமரபுர நிக்காயாவின் முடிவு. சட்டத்தை மதிக்கின்ற முடிவு.

16 11 2025 காவல்துறையின் நடவடிக்கை அத்துமீறிய நடவடிக்கை. தனியார் சொத்துக்குள் நீதிமன்ற ஆணை இன்றிப் புகுந்தமை சட்டத்தை மீறிய காவல்துறையின் நடவடிக்கை. சட்டத்தை மதித்து நடக்கும் எவரும் வன்மையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நடவடிக்கை.

விகாரை வளாகத்திலிருந்து புத்தர் சிலையைக் காவல்துறை அகற்றியமை சட்டத்துக்குப் புறம்பானது. நீதிக்கு முரணானது. அறத்துக்கு அப்பாலானது,  அன்பையும் அருளையும் அறத்தையும் அமைதியாகக் கொண்டு செல்ல முனையும் துறவிகளைத
கல் காவல்துறையும் பிறகும் தாக்கியமை கொடுமையிலும் கொடுமை.

இந்தத் தாக்குதலின் காரணமாக,  விகாரையின் தலைமை தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது என்றும், இந்த சம்பவம் அரசியலமைப்பின் 09வது பிரிவை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் இந்த சட்டவிரோத நடத்தையை  வன்மையாகக் கண்டிக்கிறது, மேலும் இந்த விவகாரத்தை உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறது.

கட்டிடத்தை அகற்றக் கூடாது என்றும், விகாரை வளாகம், விகாரை மற்றும் அங்கு வசிக்கும் துறவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அந்தக்  கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..

No comments: