Saturday, September 26, 2026

மன்னாரில் பரதவரும் சேவியரும்

 பரதர் சமூகத்தில் 4000 பேர் இறந்த வரலாறு :- 


பதினாறாம் நூற்றாண்டில் குமரிமுனை முதல் மன்னார் வரையிலான முத்துக்குளிக்கும் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த பரதர்/பரவர் சமூகம், முத்து மற்றும் சங்கு அறுவடையில் சிறந்து விளங்கிய கடல்சார் சமூகமாக இருந்தது.


 அவர்களின் வரலாறு போர்த்துகீசியர் வருகை, மூரியர்  உடனான மோதல்கள், மத மாற்றம், இடப்பெயர்வுகள் மற்றும் நோய்களால் நிறைந்தது.


 அந்த வரலாற்றின் ஒரு துயரமான அத்தியாயமே 1563ஆம் ஆண்டு மன்னார் தீவில் ஏற்பட்ட கொள்ளை நோயால் சுமார் 4000 பரதவர் மக்கள் உயிரிழந்த நிகழ்வு ஆகும்.

இது காலரா நோயாக தான் இருக்கும். இன்றைய நிலையில் மருந்து உள்ளது. அன்றைய காலகட்டத்தில் மருந்து இல்லை !


ஆரம்பகால பாதுகாப்பும் மத மாற்றமும்

பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூரியர்கள் முத்துக்குளிப்புத் துறையில் ஆதிக்கம் செலுத்த முயன்றனர்.


இந்நிலையில் பரதவர்கள் போர்த்துகீசியரின் பாதுகாப்பை நாடினர். 1535-1537 காலகட்டத்தில்  பரதர் சமூகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர்.  


1538ஆம் ஆண்டு வேதாலையில் நடந்த போரில் போர்த்துகீசிய ஆளுநர் மார்டிம் அஃபோன்சோ டி சோசா மூரியர்களைத் தோற்கடித்தார். 


“போர்ச்சுக்கீசிய ஆளுநர் இக்கிறிஸ்தவர்களுக்குப் பெரும் அன்பும் உதவியும் செய்தார். 


போர்ச்சுகீசிய தளபதி பரதவர்களை ஒன்று சேர்த்து மன்னார் தீவில் குடியேற்றவும், அவர்களுக்கு நீதி வழங்கும் அரசனையும் ஆன்மீகப் பாதுகாப்பையும் அளிக்கவும் திட்டமிட்டார். 


இரண்டு லாபம் இதில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பரதர் சமுகத்திற்கு உண்டு.


பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முத்துக்குளிக்கும் கடற்கரையில் வாழ்ந்த பரதவர் (பரதர்) சமூகம் பல ஊர்களில் சிதறிக் கிடந்தது. குமரிமுனை முதல் வேதாலை, புன்னைக்காயல், தூத்துக்குடி வரை பரவியிருந்த அவர்களின் வாழ்க்கை கடல்சார் தொழிலை மையமாகக் கொண்டிருந்தாலும், மூரியர்களின் அடக்குமுறை, உள்ளூர் அரசர்களின் போட்டி, மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக அவர்கள் ஒன்றுபட்ட சமூகமாக இல்லை. 


இந்தச் சிதறிய நிலையை மாற்றி, அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளப்பட்டன.


போர்ச்சுகீசியர்களுக்கு 


மன்னார் தீவிற்கு அருகில் முத்து குளித்தல் நடைபெறும் இடம் உள்ளது. இதனால் பரதர் சமூகம் முத்து குளித்தல் மூலமாக கிடைக்கும் முத்துகள் போர்ச்சுகீசியர்களுக்கு கிடைக்கும்.  கருத்து பெட்டியில் மன்னார் பகுதியில் உள்ள முத்து குளித்தல் பகுதி உள்ளது.


பரதர் சமூகத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும்.


தொடர் தாக்குதல்களும் இடப்பெயர்வும் (1551 – 1561)


1551 அக்டோபரில் பாஞ்சாலங்குறிச்சி அதிகாரி விசுவநாதன் (மதுரை நாயக்கர் உதவியுடன்) புன்னைக்காயலைத் தாக்கிச் செல்வங்களைக் கொள்ளையடித்தார். 


அங்கு மறைபோதகம் செய்துகொண்டிருந்த சுவாமி பவுல்தேவாலைச் சிறைபிடித்தார். 


1553இல் மூரியர்கள் மீண்டும் புன்னைக்காயலைத் தாக்கி என்றிக்ஸ் சுவாமியையும் போர்த்துகீசியத் தளபதி மனுவேல் குட்டினோவையும் சிறைப்படுத்தினர்.


1560ஆம் ஆண்டு மதுரை நாயக்கர் விசுவநாதனின் படைகள் புன்னைக்காயல் உள்ளிட்ட பல பரதவர் ஊர்களைத் தாக்கி அழித்தன. 


இதனால் போர்த்துகீசிய மீன்பிடிக் கடற்கரைத் தளபதி மனுவேல் ரோட்ரிக்ஸ் குட்டினோ, புதிதாகக் கைப்பற்றிய மன்னார் தீவுக்குப் பரதவர்களை அழைத்துச் சென்றார். 


1561ஆம் ஆண்டு புன்னைக்காயல் கிறிஸ்தவப் பரதவர்கள் மன்னார் தீவில் குடியேறினர். மன்னார் முத்துக்குளிப்பின் புதிய மையமாக மாறியது.


கொள்ளை நோயும் 4000 உயிரிழப்பும் (1563)


குடியேறிய சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1563-1564 காலகட்டத்தில் மன்னார் தீவில் பயங்கரமான கொள்ளை நோய் பரவியது.


இது காலரா என்ற நோயாக தான் இருக்கும்.


 அக்கால மருத்துவ வசதிகளோ தடுப்பு நடவடிக்கைகளோ இல்லாத நிலையில் நோய் விரைவாகப் பரவி சுமார் 4000 மக்களைப் பலிகொண்டது. 


பரதர் சமூக அம்பா நாட்டுப்புற ஒப்பாரிப் பாடல்களில் இந்நிகழ்வு நினைவுகூரப்படுகிறது. 


தீவில் மரிக்க வந்தவனோ ?


நோயால் மகனை இழந்த தாயின் துயரப் பாடல் தொடர் இதற்குச் சான்றாக உள்ளது.  



திகிலடைந்த மக்கள் பலர் உடனடியாகத் திரும்பி புன்


னைக்காயலுக்குக் குடிபெயர்ந்தனர். சில குடும்பங்கள் மட்டும் மன்னாரிலேயே தொடர்ந்து வாழ்ந்தன.


முடிவுரை:


இந்த 4000 உயிரிழப்பு வெறும் நோய் விளைவு மட்டுமல்ல.


 மூரியர்-போர்த்துகீசியர்-நாயக்கர் மோதல்கள், முத்து வணிகப் போட்டி, மத மாற்றத்தின் அரசியல் விளைவுகள் ஆகியவற்றால் ஏற்பட்ட தொடர் இடப்பெயர்வுகளின் விளைவே ஆகும். 


1542 இல் போர்ச்சுகீசிய ஆளுநர் கனவு கண்ட “பாதுகாப்பான தீவுக் குடியேற்றம்”  20 ஆண்டுகளுக்குப் பிறகு நோயால் பெரும் துயரமாக மாறியது.  


பரதவர் சமூகத்தின் இந்த வரலாறு, கடல்சார் வாழ்வின் வலிமையையும், அரசியல்-மத சூழல்களின் கசப்பையும் இன்றும் நமக்கு நினைவூட்டுகிறது.