Thursday, December 21, 2017

காங்கேயன்துறையில் இருந்து சிதம்பரத்துக்குக் கப்பல் 2009

ஈழம்-தமிழகம் தொடர்பு சிதம்பரத்தில் ஈழத் தமிழர் வழிபாடு
TamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கட்டுரைகள்



Page 1 of 1 • Share • Actions
View previous topic View next topic Go down
HOT ஈழம்-தமிழகம் தொடர்பு சிதம்பரத்தில் ஈழத் தமிழர் வழிபாடு
Post by Tamil on Thu Sep 12, 2013 7:51 am



திருவாதிரை நாளன்று, ஈழத் தமிழர் சிதம்பரத்திற்கு வந்து, வழிபட வசதி செய்துதவுக

ஈழத் தமிழர்கள், ஆண்டுதோறும் மார்கழித் திருவாதிரைக்கு ஈழத்திலிருந்து சிதம்பரத்திற்கு வந்து, வழிபட்டுச் செல்வது நெடுங்கால வழக்கு.

இவ்வாறு வரும் பயணிகளின் தங்குமிடமாக, ஈழத் தமிழர்களின் மடங்களும் வீடுகளும் சிதம்பரத்தில் இன்றும் விரவிக் கிடக்கின்றன.

வழிபாட்டுப் பயணத்திற்காகச் சிதம்பரத்திற்கு ஆண்டுதோறும் வந்து அந்த மடங்களில் தங்கி, வழிபாட்டுக் கடமைகளை ஆற்றி, மீண்டும் ஈழம் செல்வதற்காக, சிதம்பரத்தில், மாலைகட்டித் தெரு, ஞானப்பிரகாசர் குளக்கரை ஆகிய இடங்களில் பல்வேறு மடாலயங்களை ஈழத்தவர் கட்டி வைத்திருக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளாக ஈழத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக அங்கிருந்து சிதம்பரத்திற்கு வந்து வழிபட்டுச் செல்வோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைந்தது.

ஈழத்தில் போர் ஓய்ந்துவிட்டது. இந்தத் தொய்வு மாறுமுன், இயல்பான வாழ்க்கையைச் சிறிதளவேனும் மக்கள் நாடுகிறார்கள்.

முன்பு, ஆண்டொன்றுக்கு ஐந்தாயிரம் பேர் வரை சிதம்பரத்திற்கு வந்து போவார்கள். விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கடந்த சில ஆண்டுகளாகச் சிதம்பரத்துக்கு வந்து போகிறார்கள். ஈழத்திலிருந்து பிற நாடுகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்Èதோரும் தமிழக அகதி முகாம்களில் உள்ள ஈழத்தவர்களும் இப்பொழுது மார்கழித் திருவாதிரைக்காகச் சிதம்பரம் வந்து போகிறார்கள்.

ஈழத்தில் இருப்பவர்கள் இந்த ஆண்டு, சிதம்பரத்திற்கு வந்து, பத்து நாள் திருவிழாவிலும், இறுதி நாளான திருவாதிரைச் சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொள்ள விரும்புகிறார்கள்.

பின்வரும் இடர்கள் அவர்களுக்கு உள்ளன.

1. ஈழத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, தலைநகரான கொழும்புக்குப் போனால் மட்டுமே கடவுச் சீட்டையும் இந்திய நுழைவு அனுமதியையும் விமானச் சீட்டையும் பெற முடியும்.

2. ஈழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொழும்புக்குப் போவதற்குப் பல இடங்களில் பாதுகாப்புத் தடைகள் உள்ளன.

3. அவற்றையும் கடந்து, கொழும்புக்குச் செல்லும் சிலருக்கும் அங்கே தங்கும் வீடுகளிலும் விடுதிகளிலும் காவல் துறையின் பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ளன.

4. கடவுச் சீட்டு மற்றும் இந்திய நுழைவு அனுமதிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டி உள்ளது.

5. திருவாதிரையை ஒட்டிய பத்து நாள் திருவிழாவிற்காக மலையகத்திலும் இருந்தும், கொழும்பில் இருந்தும் தமிழர்கள் வரவிருப்பதால், விமானத்தில் இடப்பதிவு குதிரைக் கொம்பாக உள்ளது.

6. விமானத்தில் திருச்சிக்கோ, சென்னைக்கோ வந்து, அங்கிருந்து சிதம்பரத்திற்குப் பயணிக்க வேண்டும். மீண்டும் கொழும்புக்குச் சென்று, பாதுகாப்புக் கெடுபிடிகளைக் கடந்து தத்தம் இடங்களுக்குத் திரும்ப வேண்டும். 

அம்பாறை-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,200 கிமீ.

மட்டக்களப்பு-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,300 கிமீ.

திருகோணமலை-கொழும்பு-சென்னை-சிதம்பரம் =  1,250 கிமீ.

புத்தளம்-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  = 1,150 கிமீ.

மன்னார்-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  = 1,350 கிமீ.

வவுனியா-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,350 கிமீ.

முல்லைத்தீவு-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,530 கிமீ.

கிளிநொச்சி-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,550 கிமீ.

யாழ்ப்பாணம்-கொழும்பு-சென்னை-சிதம்பரம்  =  1,600 கிமீ.

அம்பாறை-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  900 கிமீ.

மட்டக்களப்பு-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,000 கிமீ.

திருகோணமலை-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  850 கிமீ.

புத்தளம்-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  750 கிமீ.

மன்னார்-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,050 கிமீ.

வவுனியா-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  = 1 ,050 கிமீ.

முல்லைத்தீவு-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,230 கிமீ.

கிளிநொச்சி-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,250 கிமீ.

யாழ்ப்பாணம்-கொழும்பு-திருச்சி-சிதம்பரம்  =  1,300 கிமீ.

காலாதிகாலமாக ஈழத் தமிழர்கள், சிதம்பரத்திற்கு வருவதற்காகப் பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல் ஆகிய ஈழத்தின் வடக்குத் துறைகளில் படகேறுவார்கள். தமிழகத்தின் கிழக்குத் துறைகளான திருமறைக்காடு, வேதாரணியம், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய துறைகளில் வந்திறங்குவார்கள். சிதம்பரம் செல்வார்கள். வழிபாட்டுக் கடமைகளை முடிப்பார்கள்.

எந்தத் துறைகளில் இறங்கினார்களோ, அந்தத் துறைகளில் படகில் ஏறி, எந்தத் துறைகளில் ஏறினார்களோ, அந்தத் துறைகளில் படகில் இருந்து இறங்கி எளிதாகத் தம் இடங்களுக்குச் செல்வார்கள். 1948க்கு முன்பு இருந்த நிலை இதுதான்.

1948க்குப் பின்னர் தலைமன்னார் வழியாகத் தனுஷ்கோடி வந்து, போட்மெயில் தொடர் வண்டி ஏறி, நேரே சிதம்பரம் வந்து, வழிபட்டு, மீண்டும் அதே வழியாகத் திரும்புவார்கள். 1948க்குப் பின்னர் ஈழத்தின் வட பகுதியில் இருந்து தமிழகத்தின் கிழக்குக் கரைகளுக்குச் சட்டத்துக்கு அமைய வரமுடியாது. 1992க்குப் பின்னர் தலைமன்னார், தனுஷ்கோடி, இராமேஸ்வரம் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

முசுலிம் மக்களுக்கு மெக்கா; கிறித்தவர்களுக்கு ஜெருசலம்; கத்தோலிக்கருக்கு வத்திக்கான்; புத்தர்களுக்கு புத்தகயா;  இந்துக்களுக்குத் திருக்கயிலாயம்; இவை பேன்று ஈழத்துச் சைவர்களுக்குச் சிதம்பரமே ஆண்டுதோறும் வந்து வழிபட்டுச் செல்லக் கூடிய நம்பிக்கைக்கு உரிய கோயில்.

2040 மார்கழி 16 (2010 திசம்பர் 31)ஆம் நாள் திருவாதிரைத் திருநாள். 2009 திசம்பர் 20ஆம் நாளில் இருந்து சிதம்பரம் விழாக் கோலம் பூணும். அந்தப் பத்து நாள்களும் வழிபாட்டில் ஈடுபட, ஈழத் தமிழர்களுக்கு உதவ உங்களைக் கோருகிறேன். பின்வரும் வழிகளில் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

1. ஈழத்தில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய எட்டுத் தமிழ் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும், விண்ணப்பிக்கும் தமிழர்க்குக் கடவுச் சீட்டு வழங்க இலங்கை அரசு ஆணையிட வேண்டும். இந்த வழக்கம் ஏற்கெனவே வெற்றிகரமாக நடைமுறையில் இருந்திருக்கிறது. போர்ச் சூழல் காலத்திலும் இந்த நடைமுறையைப் பின்பற்றி இருக்கிறார்கள்.

2. ஈழத்தின் வடபாலுள்ள பருத்தித்துறை, காங்கேயன்துறை, மாதகல், ஊர்காவற்றுறை ஆகிய துறைகளில் இருந்து பயணிகள் கப்பல் சேவையைத் திசம்பர் 15ஆம் நாளில் இருந்து தொடங்கி, சனவரி 10ஆம் நாள் வரை நாள்தோறும் தமிழகக் கிழக்குக் கரையில் நாகப்பட்டினத்திற்கோ, கடலூருக்கோ நியாயமான கட்டணத்தில் ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

3. இறங்கு துறையான நாகப்பட்டினம் அல்லது கடலூரில் வந்திறங்கும் இவ்வழிபாட்டுப் பயணிகளுக்காக ஒரு மாத கால நுழைவு அனுமதியைத் இறங்குதுறையிலேயே இந்திய அரசு வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

4. தமிழகச் சுற்றுலாத் துறையினரும் போக்குவரத்துக் கழகமும் அந்தந்த இறங்கு துறையில் இருந்து, சிதம்பரம் வரை போகவும், மீளவும் சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

5. இத்தகைய வழிபாட்டுக்காக வரும் பயணிகள், சிதம்பரத்தில் உள்ள பரம்பரை உரிமை மடாலயங்களில் தங்குவதற்கு உரிய வசதிகளைச் செய்யுமாறும், பள்ளிக்கூடம் போன்ற ஏனைய இடங்களிலும் உறைவிட உணவு வசதிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அம்பாறை-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  700 கிமீ.

மட்டக்களப்பு-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  620 கிமீ.

திருகோணமலை-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம் =  580 கிமீ.

புத்தளம்-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  = 560 கிமீ.

மன்னார்-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  = 550 கிமீ.

வவுனியா-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  450 கிமீ.

முல்லைத்தீவு-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  500 கிமீ.

கிளிநொச்சி-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  400 கிமீ.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை-கடலூர்-சிதம்பரம்  =  300 கிமீ.

அம்பாறை-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  600 கிமீ.

மட்டக்களப்பு-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  520 கிமீ.

திருகோணமலை-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  480 கிமீ.

புத்தளம்-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  460 கிமீ.

மன்னார்-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  450 கிமீ.

வவுனியா-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  = 350 கிமீ.

முல்லைத்தீவு-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  400 கிமீ.

கிளிநொச்சி-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  300 கிமீ.

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை-நாகை-சிதம்பரம்  =  200 கிமீ.

காலத்தின் அருமை கருதி, விரைந்து உரிய ஆணைகளை அரசுகள் பிறப்பிக்க வேண்டுகிறேன்.

Dec 07, 2009

No comments: